ராமனும் நானே, ராவணனும் நானே.. ஹீரோ, வில்லன் என ஒரே படத்தில் பிச்சு உதறிய 5 நடிகர்கள்

Actors Played Hero And Villan In Same Film: பொதுவாக ஹீரோக்கள் இரட்டை வேடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்கள். ஆனால் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களிலும் நடித்தவர்கள் சில பேர் தான். அதிலும் இரண்டு கேரக்டர்களுக்கும் சரியான முகபாவணையை கொடுத்திருப்பார்கள். அவ்வாறு ராமனும் நான் தான் ராவணனும் நான் தான் என பட்டையை கிளப்பிய ஐந்து நடிகர்களை பார்க்கலாம்.

அஜித் : எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தம்பி அஜித்தின் மனைவி மீது ஆசைப்படும் வக்கிரமான புத்தி உடையவராக அண்ணன் அஜித் நடித்திருப்பார். இந்த இரண்டு கதாபாத்திரத்திற்குமே அஜித் நடிப்பின் மூலம் வித்தியாசம் காட்டியிருப்பார்.

Also Read : மின்னல் மாதிரி வந்து ஒரே படத்தில் காணாமல் போன 6 நடிகைகள்.. அஜித் விஜய்க்கு ஜோடி போட்டும் பிரயோஜனம் இல்லாத நடிகை

விஜய் : தளபதி விஜய் அழகிய தமிழ்மகன் படத்தில் ஹீரோ, வில்லன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் வில்லன் விஜய் ஸ்ரேயாவிடம் நான் தான் கதாநாயகன் என்பது போல ஏமாற்ற முற்படுவார். ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

சிம்பு : சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மன்மதன். தம்பி ஒரு பெண்ணால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவனுக்காக வில்லன் அவதாரம் எடுக்கிறார் மன்மதன் சிம்பு. இதேபோல் ஆண்களை ஏமாற்றும் பெண்களை தண்டிக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

Also Read : சனியன தூக்கி பனியன்ல போட்ட எஸ்டிஆர்.. சிம்புவின் வாழ்நாள் பெஸ்ட் படத்திற்கு ஆப்பு வைத்த டிஆர்

விக்ரம் : வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் விக்ரம். அந்த வகையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் இருமுகன். இந்த படத்தில் விக்ரம் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தார்.

தனுஷ் : செல்வராகவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் நானே வருவேன். இப்படத்தில் தனுஷ், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு மற்றும் பலர் பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் பிரபு மற்றும் கதிர் என இரட்டை சகோதரர்களாக ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்திருந்தார்.

Also Read : நடிகர்களுக்கு இணையாக ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கிய நடிகைகள்.. ஓவராக ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்