சனியன தூக்கி பனியன்ல போட்ட எஸ்டிஆர்.. சிம்புவின் வாழ்நாள் பெஸ்ட் படத்திற்கு ஆப்பு வைத்த டிஆர்

Actor Simbu: மாநாடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய சிம்பு அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களின் மூலம் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படங்களுக்கு முன்பு சனியன தூக்கி பனியன்ல போட்டுக்கிட்ட மாதிரி பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தவித்தார்.

இதனால் அவருடைய பெயர் டேமேஜ் ஆனது மட்டுமல்லாமல், சினிமா வாய்ப்புகளையும் இழந்து தவித்தார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அவருடைய தந்தை செய்த செயல்தான். அவர் சினிமாவில் சிம்புவின் வாழ்நாள் பெஸ்ட் படத்திற்கு ஆப்பு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Also Read: மகன்களுக்கு எமனாய் அமைந்த 5 தந்தைகள்.. ஒரு காலத்தில் எஸ்டிஆர் கேரியரை கேள்விக்குறியாக்கிய டி ஆர்

ஆரம்பத்தில் சிம்புவின் வளர்ச்சியில் அவரது தந்தையின் பங்கு இருந்தாலும், ஓரளவு வளர்ந்த பின்னும் அடிக்கடி சிம்பு விவகாரத்தில் தலையிட்டுள்ளார் அவரது தந்தை டி ராஜேந்தர். இப்படி ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளார் டி. ராஜேந்தர். சிம்புவின் வாழ்நாள் கேரியர் பெஸ்ட் படமான தொட்டி ஜெயாவிற்கு டிஆர் மற்றும் உஷா ராஜேந்தர் பிரச்சினைசெய்தனர்.

‘என் மகனுக்கு கம்மியான சம்பளம் கொடுத்து ஏமாற்றுகிறார் கலைப்புலி தாணு’ என்று கவுன்சிலிடம் புகார் செய்தனர். ஆனால் சிம்பு தான் அவரிடம் அந்த சம்பளம் போதும் என்று கூறி இருந்திருக்கிறார் . இந்த பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. பின் ‘சிம்பு கேட்டதால்தான் அந்த சம்பளத்தை கொடுத்திருக்கிறார்கள், நீங்கள் தலையிடாதீர்கள்’ என போலீஸ் கமிஷனரும் டி ராஜேந்திரனை ஒதுக்கி வைத்தார்.

Also Read: ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த உலக நாயகன்.. மணிரத்தினத்திற்கு கொடுத்த அல்வா

என்னதான் எஸ்டிஆர் கொஞ்சம் ஓவர் ஆர்வக்கோளாறாக இருந்தாலும் மகன் சிம்புவின் விஷயத்தில் நிதானமாக செயல்படாமல் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் வெறியேற்றிவிட்டு அவருடைய கேரியரையே ஊற்றி மூட பார்த்திருக்கிறார். சிம்பு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அவரை அடக்கி வைத்திருக்கிறார்.

இப்போது சிம்புவின் காட்டில் மழை தான், அவருடைய 48வது படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் கமல் தயாரிக்கிறார். அடுத்ததாக சிம்பு 49 படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். இப்படி மாபெரும் கூட்டணிகள் அடுத்தடுத்து இணையும் சிம்பு தொடர் வெற்றிகளுக்கு வழி வகுப்பதால் அவருடைய ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

Also Read: அடிப்பட்ட நடிகர்களை தூக்கி விட்ட 5 இயக்குனர்கள்.. அஜித், சிம்புக்கு ஏணிப்படியாக அமைந்த விஜய் பட இயக்குனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்