கலகத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல்.. உதயநிதி படத்துக்கு இவ்வளவு தானா?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு வெளியாகியிருக்கும் படம் கலகத் தலைவன். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காற்று மாசுபடுதலை மையமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் கலகத் தலைவன் படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். சமீபகாலமாக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் உதயநிதிக்கு கழகத் தலைவன் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

Also Read : ரிலீஸ் ஆன மறுநாளே உதயநிதி தலையில் இடியை இறக்கிய சம்பவம்.. கலகத்தலைவன் வசூலில் ஏற்பட்ட சிக்கல்

இந்த படத்தில் அவரது நடிப்பு மற்றும் தோற்றம் என அனைத்துமே பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் மகிழ்திருமேனி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற நடிகர், நடிகைகளை பக்காவாக தேர்வு செய்துள்ளார். இதுவே கலகத் தலைவன் படத்திற்கு பலம் என்று சொல்லலாம்.

இவ்வாறு படத்திற்கு பல பிளஸ் பாயிண்டுகள் இருந்தாலும் ஆங்காங்கே சில மைனஸ் பாயிண்டுகளும் உள்ளது. இந்நிலையில் நேற்று முதல் நாளில் கழகத் தலைவன் படம் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த உதயநிதி.. நல்லவேளை நடிக்கல சாமி, இயக்குனர் காணாம போய்ருப்பாரு

அதாவது தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை உதயநிதி தான் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கமலஹாசனின் விக்ரம், சமீபத்தில் வெளியான பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படங்கள் வசூலை வாரி குவித்து வருகிறது.

ஆனால் உதயநிதி படம் ஒரு கோடி தான் முதல் நாளில் வசூல் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் கலகத் தலைவன் படத்தின் வசூல் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

Also Read : போறதுக்குள்ள ஒரு வெற்றி கொடுக்கணும், உதயநிதியின் கலகத் தலைவன் தேறுமா? அனல் பறக்கும் விமர்சனம்