வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

ஒரு நாளில் இவரது முகத்தை பார்க்காமல் எளிதாக இணையத்தை கடந்துவிட முடியாது. அந்த அளவுக்கு நெட்டிசன்களின் ஆஸ்தான மீம்ஸ் நாயகனாக வலம் வருபவர் தான் வைகைப்புயல் வடிவேலு. 100 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்த வடிவேலு, அரசியலில் சேர்ந்து பிரச்சாரம் என்ற பேரில் வாயைக் கொடுத்து புண்ணாக்கி கொண்டார்.

அதுமட்டுமில்லாமல், தான் நடிக்கும் படங்களில் தன் இஷ்டப்படி டையலாக்குகளை மாற்றுவது, கால்ஷீட் படி வராமல் இருப்பது என பல இயக்குனர்களுக்கு தலை வலியாய் இருந்தார். மேலும் சம்பளம் விஷயத்திலும் வடிவேலு சற்று கறாராக நடந்துக்கொண்டு தயாரிப்பாளர்களுக்கும் சில மன வருத்தங்களை கொடுத்துள்ளார். இதன் காரணமாக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்கவில்லை.

Also Read: வடிவேலு பகைத்துக்கொண்ட 5 ஹீரோக்கள்.. குண்டக்க மண்டக்க பார்த்திபனுடன் போட்ட சண்டை

அதன் பிறகு பல வருடங்கள் வடிவேலு எந்த ஒரு படத்திலும் நடிக்க கூடாது என தடை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களான சந்தானம், யோகிபாபு, சூரி உள்ளிட்டோர் வடிவேலு இல்லாத வெற்றிடத்தை நிரப்பினர். இதில் சந்தானம், சூரி உள்ளிட்டோர் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், ஹீரோ, காமெடியன் என நடிகர் யோகி பாபு நடிப்பில் கட்டாயம் வாரத்திற்கு ஒரு படமாவது திரையரங்கு முதல் ஓடிடி வரை ரிலீசாகி கொண்டிருக்கிறது.

அந்த அளவு யோகிபாபுவின் நடிப்பு மற்றும் நகைச்சுவைக்காகவே பல இயக்குனர்கள் அவர் வீடு தேடி கால்ஷீட் வாங்கி வருகின்றனர். இதனிடையே, தற்போது நடிகர் யோகிபாபு வடிவேலு நடித்துக்கொண்டிருந்த படத்தில் அவருக்கு பதிலாக இணைந்துள்ளார். நடிகர் வடிவேலு தற்போது ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் முக்கியமாக மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

Also Read: குணச்சித்திர கேரக்டரில் வெற்றி கண்ட வடிவேலுவின் 5 படங்கள்.. உடன்பிறப்பிற்காக உயிரையே விட்ட ஹீரோ

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ள ஒரு படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் இப்படத்திலிருந்து வடிவேலு தேவையில்லை என இரண்டே நாட்களில் அப்படக்குழு அவரை நீக்கியுள்ளனர். வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறிய கதையாக வடிவேலு மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.

வடிவேலு திமிராக நடந்துக்கொண்டதால் இப்படத்திலிருந்து அவரை நீக்கியுள்ளதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடிகர் யோகிபாபு உடனடியாக இப்படத்தில் நடிக்க படக்குழு தேர்வு செய்துள்ளனர். இக்கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் படக்குழு அவரை செலக்ட் செய்தனர். ஆனால் அவரது தேவையில்லாத திமிரால் தற்போது விஜய் சேதுபதி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Also Read: கூலி வேலை பார்த்துவிட்டு தற்போது ஹீரோவாக வலம் வரும் 6 நடிகர்கள்.. புகழின் உச்சத்தை தொட்ட யோகி பாபு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்