புரளியை நம்பி ஏமாந்துட்டோமே, அஜித்தின் தொப்பைக்கு தனி லக்கேஜ்.. அந்தணன் பதிவால் பற்றி எரியும் சோசியல் மீடியா

Actor Ajith: அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். ஆனால் தற்போது வரை படம் தொடங்காமல் இழுத்தடித்து வருகிறது. இந்த சூழலில் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை ஒரு படமாக எடுத்து வெளியிட உள்ளதாக அண்மைங தகவல் வெளியானது. அதோடு மட்டுமல்லாமல் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வெளியாக தொடங்கியது.

இதை பார்ப்பதற்கு அஜித் மிகுந்த எடை குறைந்தது போல காட்சி அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் சினிமா விமர்சகர்கள் பலரும் அஜித் தற்போது கடுமையாக உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்திருக்கிறார் என்று கூறி வந்தனர். அந்த வகையில் வலைப்பேச்சு என்ற யூடியூப் சேனலில் அந்தணன் என்ற சினிமா விமர்சகர் சமீபத்தில் அஜித் உடல் எடையை குறைத்து இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

Also Read : சூர்யாவுக்காக சிறுத்தை சிவா செய்த பிரம்மாண்டம்.. ரஜினி, அஜித்தை டீலில் விட இதுதான் காரணம்

இந்நிலையில் அஜித் ஏர்போர்ட்டில் இருந்து வேகமாக செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்துவிட்டு அந்தணன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் காண்டாகி இருக்கிறார்கள்.

அஜித்துக்கு நெருக்கமான ஒருவர், அஜித் தினமும் வொர்க் அவுட் செய்து ஸ்லிம் ஆகிவிட்டார் தெரியுமா என்று கூறினாராம். அதை அந்தணன் நம்பியதாகவும், இப்போது ஏர்போர்ட்டில் இருந்து அஜித் வரும் காட்சியை பார்த்தால் அவரின் தொப்பைகே தனி லக்கேஜ் போட்டு இருப்பார் போல என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

Also Read : மதுரை மண்ணில் அஜித், எதற்கு தெரியுமா.? தடபுடலான ஏற்பாடுகளுடன் தயாராகி வரும் AK

அதுமட்டும்இன்றி தனக்கு இந்த தகவலை கொடுத்தவருக்கு என்னையா இப்படி பண்ணி விட்ட என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். அஜித்தின் தொப்பையை வைத்து இப்படி உருவ கேலி செய்தது அவரது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதனால் அந்தணனை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவே பற்றி எரிகிறது.

ஆனாலும் அஜித் தொடர்ந்து தனது உடல் நிலையில் கவனம் செலுத்தி உடம்பை குறைத்தால் அவருக்கும் நல்லது என சிலர் அறிவுரை கூறி வருகிறார்கள். இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

valaipechu-anthanan
valaipechu-anthanan

Also Read : கட் அவுட் பிரச்சனையில் முளைத்த திடீர் திருப்பம்.. அஜித்தை பாலோ செய்யும் சூர்யா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்