சாம்பார் என்ற பட்டத்தை வாங்கிய ஜெமினி கணேசன்.. பலரும் அறியாத காதல் மன்னனின் லீலைகள்

இந்த காலத்தில் சில நடிகர்களை காதல் மன்னன், சாக்லேட் பாய், வசீகர பேச்சால் மயக்கும் நடிகர் என்று நிறைய பேரை நாம் சொன்னாலும் இதற்கெல்லாம் ஒட்டுமொத்த வடிவமாக அந்த காலத்தில் பெயர் வாங்கியவர் தான் ஜெமினி கணேசன். இவரது படங்கள் என்றாலே காதல் படமாக தான் இருக்கும். இவருடைய முழு நேர வேலை மற்ற பெண்களை காதலித்து வசீகரம் செய்வதுதான்.

இப்படிப்பட்ட இவர், பொதுவாக அதிரடி சண்டை காட்சிகள், திரில்லர் இதற்கெல்லாம் இடமே கொடுக்காமல் காதல் மட்டுமே மையமாக வைத்து நடித்ததால் இவருடைய படங்களுக்கு சாம்பார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவர் முதலில் அலமேலு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  பிறகு ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த மிஸ் மாலினி என்ற படத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகையான புஷ்பவள்ளியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளை பெற்ற பின்பு இவர்கள் பிரிந்து விட்டார்கள்.

Also read: ஜெமினியின் காதல் லீலையில் வெளிவந்த 5 படங்கள்.. 70-திலும் அவ்வை சண்முகியுடன் மலர்ந்த காதல்

அடுத்ததாக நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் புது முகங்களை நேர்காணல் மூலம் அவர்களின் திறமையை ஜெமினி ஸ்டூடியோவில் தெரிவிக்கும் பணியில் இருந்தார். அப்பொழுது தான் ஆந்திராவில் இருந்து நடிக்க வாய்ப்பு தேடி 12 வது வயதில் சென்னைக்கு வந்தார் சாவித்திரி. பிறகு இவருக்கு 12 வயது மட்டுமே இருந்ததால் சில வருடங்கள் ஆகட்டும் என்று இவரை தட்டிக் கழித்தனர். ஆனால் ஜெமினி கணேசன் மட்டும் இவருடைய 12வயது போட்டோவை ஜெமினி ஸ்டுடியோ ஆல்பத்தில் ஒட்டி வைத்து அதில் ரொம்ப சூட்டிகையான பெண் வருங்காலத்தில் பெரிய நடிகையாக வருவார் என்று எழுதி வைத்திருக்கிறார்.

பிறகு இவர் சொன்னது போல மாபெரும் நடிகையாக வந்தார். அதற்கு அடுத்து இவர்கள் இருவரும் மிஸ்ஸியம்மா என்ற படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்து ரகசியமாக மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள். நீண்ட காலமாக இவர்கள் திருமணம் ரகசியமாகவே இருந்தபோது லக்ஸ் சோப் விளம்பரம் ஒன்றில் நடிக்க சாவித்திரி கையெழுத்துப் போட்ட போது சாவித்திரி கணேஷ் என்று போட்ட பிறகு இவர்களின் குட்டு வெளியானது.

Also read: எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை.. சூட்டிங் ஸ்பாட்டிலே தெனாவட்டு காட்டும் ஹீரோயின்

அடுத்ததாக இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற ஜோடிகளாக இருந்த நிலையில் இவர்களின் பிரிவுக்கு காரணமாக இருந்தது சாவித்திரியின் பிடிவாதம் தான். அதாவது ஜெமினியின் பேச்சைக் கேட்காத சாவித்திரி பெரும்பாலான சொத்துக்களை இழந்தார். பிறகு இவருடைய 79வது வயதில் இவரிடம் செக்ரட்டரியாக வேலை பார்த்த ஜூலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதைப் பற்றி பலரும் இவரிடம் கேட்டபோது 82 வயதில் நெல்சன் மண்டலோ செய்யும்போது அவரை விட மூன்று வயது இளையவரான நான் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று அசால்டாக பதில் அளித்திருக்கிறார். மேலும் தனது சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பெண்களை ஆவது நான் பார்த்திருப்பேன் என்று வெளிப்படையாக சொன்னவர். அத்துடன் நடிப்பது மட்டுமில்லாமல் கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கார் ஓட்டுவதிலும் வல்லவர். பிறகு இவருடைய அற்புதமான நடிப்புக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Also read: முழு நேர வேலையாகவும் காதலித்த ஜெமினியின் 5 படங்கள்.. வசீகரா பேச்சால் கவர்ந்த காதல் மன்னன்

- Advertisement -spot_img

Trending News