இந்த வாரம் ஓடிடியில் நச்சுன்னு வெளியாகும் 7 படங்கள்.. மலைக்கோட்டை வாலிபன் எதில் தெரியுமா?

This Week Ott Release Movies : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகும் நிலையில் இந்த வாரம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏழு படங்கள் இந்த வாரம் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மலைக்கோட்டை வாலிபன் : மோகன்லால் மற்றும் சோனாலி குல்கர்னி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. பழம்பெரும் மனிதனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி ஓடிடியில் ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

போச்சர்: நிமிஷா சஜயன், திபியேந்தி மற்றும் ரோஷன் மேத்தியோ ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் தொடர் போச்சர். காடுகளில் உள்ள விலங்குகளை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் வருகின்ற பிப்ரவரி 23 அமேசான் பிரைமில் வெளியாகிறது.

அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் : கோர்டன் கார்மியர், டல்லாஸ் லியு, இயன் ஓஸ்ஸி, பால் சன் ஹியுங் லீ மற்றும் கியாவென்டியோ ஆகியூர் நடிப்பில் உருவாகி உள்ள அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் பிப்ரவரி 22 நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

Also Read : 29 வருடங்களுக்கு முன் பிரபு நடித்த படம்.. அதே கதையை கொண்டு நடித்து ஹிட் கொடுத்த மோகன்லால்

அப்பார்ட்மெண்ட் 404 : ஜென்னி, யூ ஜே-சுக், சா டே-ஹ்யூன் பலர் நடித்துள்ள அப்பார்ட்மெண்ட் 404 அமேசான் பிரைமில் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகிறது.

பவர் புக் lll : பாட்டினா மில்லர், மால்கம் எம். மேஸ் நடிப்பில் உருவாகி உள்ள பவர் புக் lll ரைசிங் கானன் லயன்ஸ்கேட் பிளேயில் பிப்ரவரி 23 ரிலீஸாகிறது.

சா எக்ஸ் : புற்றுநோய்க்கு அதிசய சிகிச்சை மேற்கொள்ளும் கதையை கொண்டு உள்ள சா எக்ஸ் பிப்ரவரி 23ஆம் தேதி லயன்ஸ்கேட் பிளேயில் வெளியாகிறது.

தி இந்திராணி முகர்ஜி ஸ்டோரி : இந்திராணி முகர்ஜி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பிப்ரவரி 23 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது.

Also Read : யாரும் மிஸ் பண்ணிடாம பார்க்க வேண்டிய 10 மலையாள ஹிட் படங்கள்.. எப்போதும் ராஜாவாக வலம் வரும் மோகன்லால்

Next Story

- Advertisement -