மனைவி பேச்சைக் கேட்டு ஆடும் ஜடேஜா.. மகன் வளர்ச்சிக்கு தூக்கத்தை தொலைத்த அப்பாவின் கண்ணீர்

Father in tears over all-rounder Jadeja’s actions: இந்திய கலாச்சாரம் என்பது  குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து கொண்டாடும் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. குடும்பத்தில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து வாழும் நம் சமுதாயத்தில், சண்டே சச்சரவு இல்லாத குடும்பங்களும் இல்லை எனலாம். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர சடேஜா குடும்பம் விதிவிலக்கா என்ன?

2009 ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான ரவீந்திர சடேஜா அவர்கள் 226 போட்டிகளில் பங்கேற்று கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக வலம் வருகின்றார். இதுபோக ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று சிஎஸ்கேவுக்கு ஆதரவாக விளையாடி வருகிறார் ரவீந்திர ஜடேஜா.

ஐபிஎல் இல் இதுவரை ராஜஸ்தான்,கேரளா, குஜராத் மற்றும் சென்னை என நான்கு அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் மூலமாகவே 100 கோடிக்கும் மேல் வருமானம் பார்த்துள்ளார். இது தவிர பிசிசிஐ, ஏ கிரேடில் இருக்கும் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஆண்டு வருமானமாக ஏழு கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also read: கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவின் 6 டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்கள்.. வக்கார் யூனிசின் கேரியரில் ஜடேஜா வைத்த கரும்புள்ளி

கிரிக்கெட் தவிர விளம்பரங்கள், ஹோட்டல் பிசினஸ் என பல துறைகளிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின் ஜடேஜாவின் மனைவி, ஜடேஜாவின் ரெஸ்டாரண்டுகளை கவனித்துக் கொண்டும், கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஜடேஜாவின் திருமணத்திற்கு பின் மனக்கசப்பில் இருந்த அவரது தந்தை, என் மகன் ஜடேஜா கிரிக்கெட் விளையாடுவதற்காக இரவில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்திருக்கிறேன். 20 லிட்டர் பால் கேன் தூக்கி சம்பாதித்து இருக்கிறேன் இருந்தும் திருமணம் முடித்தவுடன் பெற்றோரை  கண்டு கொள்ளாது மனைவியின் குடும்பத்தின் பேச்சைக் கேட்டு வருவதாக பேட்டி ஒன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தன் மனைவி மீது எந்த ஒரு தவறும் இல்லை, என் மனைவியின் நற்பெயருக்கு என் தந்தை களங்கம் விளைவிக்கிறார். மேலும் பொது வழியில் தனது குடும்பத்தை பற்றி பேச விரும்பவில்லை என்று இதைப் பற்றி கருத்து கூற மறுத்து வருகிறார் ஜடேஜா. இதே ஆல்ரவுண்டர் ஜடேஜாதான் 12 ஆண்டுகளுக்கு முந்தைய தனது பதிவில் பெற்றோர் காலில் தினமும் விழ வேண்டும் என்று வலைபொழிவு ஆற்றியிருந்தார் என்பதை மறந்துவிட்டார் போலும்!