தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளவர் பரினா அகமது. தற்போது இவர் டிவி நிகழ்ச்சிகளில் மற்றும் ஒருசில சீரியலிலும் நடித்து வருகிறார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து ரசிகர்களை மிகவும் பிரபலமானார்.
பரினா ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு பெரிய அளவு வரவேற்பு வாங்கி கொடுத்தது பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்ததால் ரசிகர்கள் பலரும் இவர் மேல் கோபத்துடனே இருந்தனர்.
ஆனால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு சந்தோசமான தகவலை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆனால் பரினா தன் வயிற்றில் மருதாணி வைத்து வரைந்த படி புகைப்படம் ஒன்றை எடுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி செய்யலாமா என ஒரு சில ரசிகர்கள் திட்டித் தீர்த்து உள்ளனர்.
மேலும் சில ரசிகர்கள் இவ்வளவு கேவலமாக புகைப்படத்தை எல்லாம் வெளியிடலாமா என கேட்டுள்ளார். இதற்கு பரினா உடலமைப்பும் பார்வையும் அசிங்கமாக பார்ப்பது நீங்கள்தான் என அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மேலும் பரினா ரசிகர்களுக்கு ஒரு சில ரசிகர்களும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.