தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனுஷின் ஆரம்பகால படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அந்த வகையில் ஸ்டான்லி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் அபர்ணா பிள்ளை. இப்படத்தில் ஒரு துருதுருவென சுறுசுறுப்பான ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணா பிள்ளை நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்த ஏபிசிடி, கண்ணுக்குள்ளே போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு ஊடகத்திற்கு அபர்ணா பிள்ளை பேட்டியளித்துள்ளார். அதாவது 2011-ம் ஆண்டு பரணி என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் அபர்ணா பிள்ளை அந்த பேட்டியில் பேசும் போது தன்னுடைய பள்ளி தோழன் சிம்பு என குறிப்பிட்டிருந்தார். மேலும் மன்மதன் படத்தில் சிம்பு அபர்ணா என்ற பெண்ணை கொன்றுவிடுவார். அந்த காட்சி என்னை வைத்துதான் எடுத்து இருப்பார் என்று நினைக்கிறேன் என விளையாட்டாக கூறினார்.
மேலும் புதுக்கோட்டை சரவணன் படத்தில் நான் கிளாமராக நடித்தால் தொடர்ந்து அதுபோன்ற வாய்ப்புகளே வந்து கொண்டிருந்தது. இதனால் நான் சில வாய்ப்புகளை மறுத்து விட்டேன் என கூறினார். மேலும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் கல்லறையின் மேல் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு காட்சி வரும்.
அந்த காட்சி எடுக்கும்போது எனக்கு பிறந்தநாள். அவ்வாறு பிறந்த நாளன்று கல்லறையில் மேல் இருக்கும் காட்சி எடுக்கப்பட்டது எனக் கூறினார். இந்நிலையில் தற்போது அவருடைய புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அபர்ணா பிள்ளையா இது என ஷாக் ஆகி உள்ளனர்.