தமிழ் சினிமாவை தலைநிமிர வைக்கும் கமல்ஹாசன்.. ஆண்டவர்னா சும்மாவா

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத் உட்பட பல நடிகர்களின் திரைப் படங்களும் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் சாதனை படைத்து வந்தது. சொல்லப்போனால் திரைக்கதை வலுவாக இல்லாத போதிலும் இந்த நடிகர்களின் படங்கள் கல்லா கட்ட தவறியது கிடையாது.

ஆனால் சமீபகாலமாக இவர்களின் நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படமும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. அதிலும் ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை போன்ற திரைப்படங்கள் பல கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் திரைப்படம் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமலின் நடிப்பில் இப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருப்பதால் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இவரின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. அதனால் இந்த திரைப்படமும் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய இடத்தை பெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா போன்ற பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் வகையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் நிறைய மெனெக்கெட்டு வேலைகளை செய்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் மேக்கிங் சம்பந்தப்பட்ட சில வீடியோ காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அதனால் வரும் ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கும் விக்ரம் படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டாக இருக்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் ஆண்டவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்வார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Next Story

- Advertisement -