லாஜிக்கே இல்லாமல் நடக்கும் சர்வைவர் நிகழ்ச்சி.. பிக்பாஸ்க்கும் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரே வித்தியாசம்தான்

தற்போதெல்லாம் விதவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அதன் மூலம் தனது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ள பார்க்கும் டிவி சேனல்கள், அதற்காகவே சினிமா பிரபலங்களை வைத்து வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் ரசிகர்களும் ரியாலிட்டி ஷோக்களை காண்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

அவ்வாறுதான் விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ், சன் டிவியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர்.

எனவே தற்போது சர்வைவர் நிகழ்ச்சியை ஜான்சி பார் என்ற டான்சானியா தீவு ஒன்றில் எடுத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் திறமையான 18 பிரபலங்களை அந்த காட்டில் விட்டுவிடுவார்கள். அங்கு 90 நாட்கள் இவர்கள் குடிக்க தண்ணீர், சாப்பிட உணவு இவை எல்லாம் எவ்வாறு தேடிக் கொள்கிறார்கள் என்பதையும், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாக கொண்டதுதான் இந்த நிகழ்ச்சி.

தற்போது இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பித்துவிட்ட சில நாட்களிலேயே பல விமர்சனங்களுக்கு உள்ளானது. பலர், ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் திட்டமிடப்பட்ட ஸ்கிரிப்ட் தான் என்றே கூறி வருகின்றனர். முந்தினம் ஒளிபரப்பான அத்தியாயத்தில் பெசன்ட் ரவி மற்றும் அம்ஜத் இருவரும் உணவு தேடி அந்த காட்டை சுற்றி வந்தனர்.

அப்போது, அங்கு ஓர் கிழங்கு செடியை கண்டுபிடித்தனர். அதுவும் அந்த செடியை பார்த்ததும், அது ஏதோ கிழங்கு செடி மாதிரி தெரியுது அண்ணா என்று சொன்னதும், பெசன்ட் ரவி  ‘ஆமாம் இது ஆள வள்ளிக்கிழங்கு போல் இருக்கிறது. சற்று அருகில் சென்று பார்க்கலாம்’ என்றார்.

மண்ணில் ஆழமாக தான் கிழங்கு செடிகள் ஊன்றி வளரும் அவையை பிடுங்குவது மிகவும் கடினம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கிழங்கு செடிகள் புடுங்கியதும் கையில் வந்துவிட்டது. இதனை கண்ட ரசிகர்கள், இது தானாகவே வளர்ந்தது போல் இல்லை, யாரோ வளர்த்து அதைக் கொண்டு வந்து நட்டு வைத்தது போல் இருக்கிறது என்றும் அதுமட்டுமின்றி, சாப்பிட பொருள் கிடைத்தால் வெகு நேரம் சாப்பிடாமல் இருந்தவருக்கு முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரியும். ஆனால், இவர்கள் முகத்தில் அது தெரியவில்லை. இது திட்டமிடப்பட்ட செயலாகத்தான் இருக்கும் என்பதே நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களின் கண்ணோட்டம்.

survivor-twit
survivor-twit

இதுமட்டுமின்றி, இந்த காட்டில் தென்னை மரம், வாழை மரம் எல்லாம் சரியாகவும் சமமாகவும் இடைவெளியுடன் இருக்கிறது. காட்டில் எப்படி இப்படி இருக்கும்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, வீட்டில் சண்டை போட்டால் அது பிக்பாஸ். காட்டில் சண்டை போட்டால் அது சர்வைவர் என்றெல்லாம் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதி விடுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்