ஆயிரம் சொல்லுங்கள் ரோஷினி மாதிரி நீங்க இல்ல.. கண்ணம்மாகிட்ட கத்துகிட்டு வாங்க என கலாய்க்கும் ரசிகர்கள்!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா நெடும் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிறது. ஏனென்றால் பாரதி எட்டு வருடங்களாக பிரிந்திருந்த தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதில் நேற்றைய எபிசோட்டில் கண்ணம்மாவை விவாகரத்து செய்வதற்காக வலுவான காரணத்தை நீதிபதியிடம் சொல்ல பாரதி தயாராகிவிட்டார்.

ஆகையால் பாரதி கண்ணம்மாவை தவறாக ஏதாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் சௌந்தர்யா மோசமான கனவு காண்கின்றார். அதில் கண்ணம்மா பாரதி தன்னை நடத்தை கெட்டவள் என்று கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் கத்தியால் பாரதியை கண்ணம்மா குத்தி விடுகிறார். அப்போது ஆக்ரோசமாக மாறிய கண்ணம்மாவை ரசிகர்கள் தாறுமாறாக பங்கம் செய்துகொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த ரோஷினி கோபப்படும் பொழுது கூட அழகாக இருக்கும். எனவே ரோஷினியின் கோபத்தைக் கூட ரசிகர்கள் மெய்மறந்து ரசிப்பார்கள்.

ஆனால் தற்போது புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா தேவி ஆபாசபடும்போது பார்க்கவே முடியவில்லை. ரோஷினி அளவிற்கு வினுஷாவால் ஈடுகொடுத்து நடிக்க முடியவில்லை என்பது ரசிகர்களின் கருத்து.

அத்துடன் ஒரு சாயலில் ரோஷினி மாதிரியே வினுஷாவிற்கு மேக்கப் போட்டு மாற்றினாலும், ரோஷினியின் நடிப்பை இயக்குனர்களால் வினுஷாவிடம் வெளிக்கொணர முடியவில்லை.

பொதுவாக சீரியல்களில் திடீரென்று கதாபாத்திரத்தை மாற்றினால் அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் காலதாமதமாக இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல அதுவே பழகிவிடும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்