புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மனதிற்கு பிடித்தவர்கள் 5 பேரை பலி கொடுத்த 2023.. சாதாரண மக்களையும் விட்டு வைக்காத தரித்திரம் பிடித்த வருஷம்

Famous Tamil celebrities unexpected deaths in 2023: சரித்திரத்தை புரட்டி போடும் ஜாம்பவான்களும் இன்று வரை பூமி மேலே நிம்மதியாக வாழ்ந்ததில்லையே. நம் உணர்வுகளுடன் ஏதோ ஒரு வகையில் கனெக்ட் ஆகி இருந்த மனிதர்களின் மரணங்கள் ஜீரணிக்க முடியாமல் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாமே என்று இறைவனிடம் கெஞ்சி கேள்வி கேட்பது இயற்கையே. அப்படியாக இந்த வருடத்தில் நம் மனதை உலுக்கிய மாமனிதர்கள்,

போண்டாமணி: “இந்த பொழப்புக்கு நீங்களும் என் கூட சேர்ந்து பிச்சை எடுங்க”  என்று மருதமலையில் வடிவேலுவை விரட்டிய போண்டாமணியை யாரும் மறந்திருக்க முடியாது. வெகுளியான முகபாவனையுடன் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகபணியாற்றிய போண்டாமணி அவர்கள் வறுமையின் பிடியில் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் 2023 டிசம்பரில் காலமானார்.

மாரிமுத்து: “எம்மா ஏய்”  என்ற உச்சரிப்பின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் நெஞ்சில் நிறைந்த மாரிமுத்து, நெஞ்சுவலி காரணமாக செப்டம்பர் 2023 இல் காலமானார். குணச்சித்திர நடிகராக அடைய முடியாத புகழை குணசேகரன் ஆக சின்னத்திரை சீரியல் மூலம் பெற்றார் மாரிமுத்து.

Also Read: 2023ல் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள்.. கண் கலங்க வைத்த மயில்சாமி, குணசேகரன்

விஜயகாந்த்: கேலிகளை துவம்சம்  செய்து கடின உழைப்புடன் தன்னைத்தானே உயரத்தில் வைத்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் 2023 டிசம்பரில் காலமானார். தன்னை நாடி வருபவர்களின் மனசு வயிறு இரண்டையும் நிறைத்து அனுப்பும் இந்த மனிதரின் இழப்பு தமிழகத்தை துயரக் கடலில் ஆழ்த்தியது.

மயில்சாமி: காமெடி டைமாக வந்து பல பேருக்கு என்டர்டைமண்ட் ஆக இருந்த மயில்சாமி நிஜ வாழ்க்கையில் பலருக்கும் உதவும் மனம் கொண்ட உத்தமராவார். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக வாழ்க்கை தொடங்கியவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோபாலா:உதவி இயக்குனராக தன் பயணத்தை தொடங்கிய மனோபாலா இயக்குனர், தயாரிப்பாளர்,குணச்சித்திர நடிகர், காமெடியன் என பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஒல்லியான தேகம் கொண்டு காமெடியில் ரசிகர்களின் வயிறை புண்ணாக்கியவர் கல்லீரல் பாதிப்பின் காரணமாக மே 2023 இல் காலமானார்.

பிரபலங்கள் மட்டுமின்றி மனிதர்களையும் வாட்டி வதைத்து எடுத்தது 2023. ஆம் ஆங்காங்கே கொரோனா போன்ற கொடிய நோய்களும் சைலன்டாக வந்து வயலன்ஸ் செய்தது. இது மட்டுமா வரலாறு காணாத மழை வெள்ளம், புயல் என மக்களை சுழட்டி எடுத்தது. பிறவி என்ற தூண்டில் முள்ளில் மாட்டிக்கொண்ட புழுவைப் போல மரணம் வரை  திருப்பத்தை தேடி திக்கற்று அலைகிறது இந்த மனித ஜன்மம்.

Also Read: 2023 இல் கெட்ட பேர் வாங்கிய 5 இயக்குனர்கள்.. சந்திரமுகியை ஏமாற்றிய வாசு

- Advertisement -

Trending News