வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் டிவி, சன் டிவியிலிருந்து துரத்தப்பட்டு.. ஜீ தமிழில் ஜொலிக்கும் பிரபல நடிகை!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள சீரியல் தான் சத்யா. இந்த சீரியலில் சாதாரண வறுமை குடும்பத்தை சேர்ந்த இளைய மகளாகவும், ஓரு டாம்பாய் போன்ற கதாபாத்திரமாகவும் நடித்து வருகிறார் ஆயிஷா. இவர் தனது அசத்தலான நடிப்பால் தற்போது அதிக ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். இவரை வலைதளங்களில் பாலோவ் செய்யும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உண்டு.

என்னதான் இவரைப் பற்றி அதிக அளவிலான கிசுகிசுக்கள் பேசப்பட்டாலும் அதற்கெல்லாம் வளைந்து கொடுக்காத ஆள்தான் ஆயிஷா. இவர் நிஜ வாழ்க்கையில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவராம். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். ஆயிஷா முதலில் விஜய் தொலைக்காட்சியில் ‘பொன்மகள் வந்தாள்’ என்ற சீரியலில் நடித்தது மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்.

அப்போது நடிகை ஆயிஷாவுக்கும் அந்த சீரியலின் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக ஆயிஷா அந்த சீரியலில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து இவருக்கு வேறு எதிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் பல விதமான கேலி சொற்களுக்கு ஆளாகினார். நீண்ட நாட்களுக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மாயா என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் இவரின் நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

ayesha
ayesha-cinemapettai

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் சத்யா சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. தக்க சமயத்தில் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆயிஷா தற்போது சின்னத்திரையில் சாதித்து வருகிறார் என்றே சொல்லலாம்.

ஆயிஷாவின் ஆரம்பகால சினிமா பயணத்தின்போது அவரை பல விதத்தில் உருவ கேலியும் செய்துள்ளனர். ‘உனக்கு நடிப்பே வரல,நீ எல்லாம் வேஸ்ட், ரொம்ப ஒல்லியா இருக்கிற’ என்றெல்லாம் கிண்டல் அடித்துள்ளனர்.

இருப்பினும் மனம் தளராத ஆயிஷா தற்போது சத்யா தொடரில் தன்னை கிண்டலடித்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி வருகிறார். இவருடைய இந்த முன்னேற்றம் பல இளம் நடிகைகளுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது.

- Advertisement -

Trending News