பிக்பாஸ் சீசன்5ல் பங்கேற்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பிரபலம்.. அடுத்த கவின் இவர்தான்!

வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் துவங்கவுள்ளது.அதற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவகிறது. அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.இவர்களை ஒருவாரம் மட்டும் தனிமையில் வைத்திருக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது.

அண்மையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஒரு சில பிரபலங்கள் சேர்ந்து இருக்கும் குரூப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இந்த புகைப்படத்தில் ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி ஆகியோர் உள்ளனர்.

எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் நான்கு பேரும் ஒரே இடத்தில் இருப்பதால் நிச்சயம் இவர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக தான் இருப்பார்கள் என்று உறுதி செய்துள்ளனர். அதன் பிறகு மாஸ்டர் படத்தின் சூப்பர் ஹிட் பாடலான வாத்தி கம்மிங் என்றுபாடலுக்கு விஜய் அருகில் நடனமாடிய சிபி, பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ இரண்டாம் பாகம் சீரியலில் கதாநாயகன் மாயன் உடைய நெருங்கிய நண்பனானகத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் ராஜு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் ராஜூக்கு தனியாக ரசிகர் கூட்டமே உள்ளது.

raju-cinemapettai
raju-cinemapettai

அத்துடன் இவர் பிக் பாஸ் போட்டியாளரான கவின் நடித்த ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீரியல் நடிகரானார் ராஜு போலவே பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் நுழைந்த கவின், அங்கு செய்த காதல் லீலைகளால் பிரபலமாகி, தற்போது சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அவரைப்போலவே ராஜுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னொரு கவின் ஆக மாறுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். எனவே பிக் பாஸ் சீசன்5 தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றிய முழு விவரமும் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்