ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த சூர்யா 42.. ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படம் பத்து மொழிகளில் 3டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் டீசர், டைட்டில் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா 42 படத்தின் ஓடிடி ரைட்சை பிரபல நிறுவனம் பல கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இதில் சூர்யா 5 வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

Also Read: சூர்யாவின் 42 வது படத்தின் தலைப்பு.. வெற்றியை உறுதி செய்த சிறுத்தை சிவா

இந்நிலையில் படத்தின் ஓடிடி ரைட்சை அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூர்யா42 படம் துவங்கப்பட்ட முதலே, இப்படத்தின் ஃப்ரீ பிசினஸ் குறித்த செய்தி தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் பிசினஸை விட சூர்யா 42 படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓடிடி உரிமையும் பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: லியோவை ப்ரீ பிசினஸில் முந்திய சூர்யா 42.. உண்மை நிலவரத்தை போட்டு உடைத்த தயாரிப்பாளர்

அது மட்டுமல்ல ஓடிடியில் அதிலும் தமிழில் அதிக விலைக்கு விற்பனையான இரண்டாவது படம் சூர்யா 42 தான் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், விரைவில் சூர்யா 42 படத்தின் டீசர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை முடித்த கையோடு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் இணைகிறார். எனவே சூர்யா 42 அதைத்தொடர்ந்து வாடிவாசல் என அடுத்தடுத்து திரையரங்கில் வசூல் வேட்டையாட கூடிய சூர்யாவின் படங்கள் வெளியாகி ரணகளம் செய்யப் போகிறது.

Also Read: சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Next Story

- Advertisement -