அக்கட தேசத்து நடிகரை அலேக்காக தூக்கிய லோகேஷ்.. தளபதி 67 வில்லனாக மிரட்டபோகும் மாஸ் நடிகர்

விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கடந்த சில தினங்களாக இப்படத்தைப் பற்றி நிறைய செய்திகள் இணையத்தில் உலாவி வருகிறது. இப்படத்தில் சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் படத்தில் வில்லன்களுக்கு மாஸ் ரோல் கொடுக்கப்படும். அந்த வகையில் லோகேஷ், விஜய் கூட்டணியில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு பவானி என்ற வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. மேலும் மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

Also Read :சொகுசு வீடு வாங்கிய விஜய்.. விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது தளபதி 67 இல் விஜய்க்கு வில்லனாக அக்கட தேசத்திலிருந்து பிரபல நடிகருக்கு வலை விரித்துள்ளார் லோகேஷ். இவர்கள் இருவரும் அப்பா, மகனாக ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் இணைய உள்ளனர்.

அதாவது மலையாள நடிகர் மோகன்லால் தான் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. சமீபத்தில் இவரது ட்விட்டர் கணக்கை லோகேஷ் கனகராஜ் பின் தொடர்ந்து வருகிறார். ஏற்கனவே விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் ஜில்லா படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

Also Read :அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய், ஆக்ஷனுக்கு லீவு விடும் இளைய தளபதி

இவர்களது கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக மோகன்லால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகார தகவல் வெளியான பின்னர் தான் இது பற்றிய உண்மை நிலவரம் தெரியவரும்.

மேலும் முழுக்க முழுக்க லோகேஷ் படமாக உருவாகும் தளபதி 67 படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் பல சம்பவங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதனால் இப்படத்தை குறித்து அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Also Read :தளபதி 67 நடிகையை உறுதிசெய்த லோகேஷ்.. ஏஜென்ட் டீனாவை மிஞ்சும் பவர்ஃபுல் ரோல்

- Advertisement -