அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய், ஆக்ஷனுக்கு லீவு விடும் இளைய தளபதி

காதல் திரைப்படங்களில் நடித்து இளையதளபதி என்னும் உச்சத்தை அடைந்தவர் தான் நடிகர் விஜய். ஆனால் விஜய் இப்போது மாஸ் ஹீரோவாக மாறியதால் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதல் கதைகளில் நடிப்பதில்லை. ஆனால் பழைய விஜயை பார்க்க வேண்டும் என அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு ஆசை இருக்க தான் செய்கிறது.

நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்க்கு இயக்குனர் விக்ரமின் ‘பூவே உனக்காக’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் விஜய்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

Also Read: கமலின் மருதநாயகத்தை போல ரஜினி, அஜித், விஜய்க்கு டிராப் ஆனா 11 படங்களின் லிஸ்ட்

அதன் பின்னர் லவ் டுடே, காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே, ஷாஜஹான், வசீகரா என்ற விஜய் நடித்தது அனைத்துமே காதல் திரைப்படம் தான். திருப்பாச்சிக்கு பிறகே விஜய் ஆக்சன் ஹீரோவாக மாறினார்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயுடன் பணியாற்ற திட்டமுள்ளதாக கூறினார். மேலும் விஜய்க்கு இப்போது சூப்பர் ஸ்டார் இமேஜ் வந்துவிட்டதாகவும், மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜயை மீண்டும் காதல் கதைகளில் நடிக்க வைக்கவே விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also read: இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த விஜய்.. அஜித் ஆள் அட்ரஸ் காணுமே

ஏற்கனவே நடிகர் விஜய்யும் இயக்குனர் கௌதமும் யோகன் அத்தியாயம் ஒன்று என்னும் திரைப்படத்தில் இணைய இருந்தனர். ஆனால் கௌதம் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி மட்டுமே விஜயிடம் சொல்லிருந்தார். விஜய் அவரை முழு கதையுடன் வர சொல்லியிருந்தார், அவர் தாமதப்படுத்தவே விஜய் AR முருகதாஸுடன் துப்பாக்கி படத்தில் இணைந்துவிட்டார்.

கௌதம் வாசுதேவ் மேனனுடன் விஜய் இணைந்தால் மீண்டும் ஒரு நல்ல காதல் கதையில் விஜயை பார்க்கலாம். சச்சின் படத்திற்கு பிறகு விஜய் காதல் கதையில் நடிப்பது ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக இருக்கும்.

இரவு பார்ட்டியில் அஜித் மகள், ஷாலினி.. புகைப்படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன