ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ராமதாஸின் பயோபிக்கில் நடிக்கப் போகும் ஸ்டார் நடிகர்.. நிஜத்துல தலைவனாக முடியல படத்துலயாவது ஆயிடும்

Doctor Ramadoss: தமிழ்நாட்டின் அரசியல் கட்சியைப் பொறுத்தவரையில் திமுக மற்றும் அதிமுக ஆகியவை தான் முதன்மை இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பெரிதும் பார்க்கப்படுவது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாஸ் அரசியலில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்த நிலையில் அவரது மகன் அன்புமணி ராமதாசும் அரசியலுக்கு வந்துவிட்டார்.

பாமக ராமதாஸின் பயோபிக்கில் பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளார். அதாவது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான் நடிக்கிறார். இவர் ஹீரோவாக நடித்ததை காட்டிலும் இப்போது தான் அவருக்கு மவுசு ஏறி இருக்கிறது. ஏனென்றால் அப்போது அவருக்கு போட்டியும் அதிகம் அதோடு மட்டுமல்லாமல் ஹீரோ கதாபாத்திரத்தை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

Also Read : ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய 6 நடிகர்கள்.. செகண்ட் இன்னிங்ஸில் கோடியில் புரளும் சரத்குமார்

இப்போது எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் பெயரை வாங்கிக் கொடுத்தது. அடுத்ததாக இதே போன்ற திரில்லர் சம்பந்தமான கதைகள் சரத்குமார் அதிகம் நடித்து வருகிறார்.

இதனால் நிற்கக்கூட நேரமில்லாத அளவுக்கு பல படங்களில் கால்ஷீட் கொடுத்து சரத்குமார் நடித்து வருகிறார். இந்நிலையில் ராமதாஸ் பயோபிக் படத்தை இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் தான் இயக்க இருக்கிறாராம். ஏற்கனவே இது குறித்து சரத்குமார் இடம் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இப்போதைக்கு சரத்குமார் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பை தொடங்கிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறாராம்.

Also Read : வில்லனா இருந்த உன்ன ஹீரோவா ஆக்கினது தப்பா போச்சு.. இமேஜ் பார்க்கும் சரத்குமார், புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர்

இதற்கான வேலையில் தான் தற்போது சேரன் இறங்கி இருக்கிறார். ஏற்கனவே ராமதாஸ் மற்றும் சரத்குமார் இருவருக்கும் அரசியல் சம்பந்தமாக காரசாரமான விவாதங்கள் நடந்திருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் ராமதாஸின் பயோபிக்கில் சரத்குமார் நடிக்க எப்படி சம்மதித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் அது முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம். ஆகையால் சினிமாவை பொறுத்தவரையில் இதில் விருப்பம், வெறுப்பு ஆகியவை எதுவும் பார்க்காமல் ஒரு நடிகராக தனது கடமையை சரத்குமார் செய்ய இருக்கிறார். அந்த வகையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் நிஜத்தில் தான் அரசியல்வாதிகாக சரத்குமாரால் கலக்க முடியவில்லை என்றாலும் படத்திலாவது பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

- Advertisement -

Trending News