ராக்கெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்திய 6 நடிகர்கள்.. செகண்ட் இன்னிங்ஸில் கோடியில் புரளும் சரத்குமார்

6 Actors Who Raised Salary: பொதுவாக டாப் நடிகர்கள் 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வரும் நிலையில் அதற்கு அடுத்த கட்டமாக உள்ள நடிகர்களும் இப்போது சம்பளத்தை உயர்த்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ராக்கெட் வேகத்தில் அதிரடியாக 6 நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

பகத் பாசில் : தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் பட்டியலில் இப்போது பகத் பாசில் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அதுவும் மாமன்னன் படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த சூழலில் பகத் பாசில் இப்போது ஒரு படத்திற்கு மட்டும் கிட்டதட்ட 8 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.

Also Read : மலையாள ஹீரோக்களை வெறுப்பேற்றிய பகத் பாசில்.. வரிஞ்சு கட்டிக்கொண்டு தமிழுக்கு வரும் அமுல் பேபி

ராகவா லாரன்ஸ் : ஒரு காலகட்டத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு படங்கள் நடித்துக் கொண்டு இருந்த லாரன்ஸ் இப்போது வருடத்திற்கு நான்கு படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு படத்திற்கே தனது சம்பளத்தை அதிகப்படியாக உயர்த்தி இருக்கிறார். அதன்படி ஹீரோவாக நடித்த லாரன்ஸ் 25 கோடி சம்பளம் பெறுகிறார்.

எஸ்ஜே சூர்யா : மாநாடு படத்திற்குப் பிறகு தவிர்க்க முடியாத நடிகர்களும் ஒருவராக எஸ்ஜே சூர்யா வலம் வந்து கொண்டிருக்கிறார். டாப் நடிகர்கள் படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா கமிட்டாகி நடித்து வருகிறார். இப்போது ஒரு படத்திற்கு எஸ்ஜே சூர்யா 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

Also Read : எஸ்ஜே சூர்யாவை சைக்கோவாக பார்க்கும் 5 நடிகைகள்.. வில்லங்கமான காட்சிகள் இருக்கும்னு பயம்

கார்த்தி : கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படம் இவருக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார். அந்த வகையில் கார்த்தி ஒரு படத்திற்கு 7 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

சசிகுமார் : அயோத்தி படம் சசிகுமார் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. இயக்குனராக இருந்ததை காட்டிலும் இப்போது நடிகராக தான் சசிகுமார் ரசிகர்களிடம் அதிகம் பரிச்சியமாகி உள்ளார். இப்போது சசிகுமாரும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அதன்படி ஒரு படத்திற்கு 5 கோடி சம்பளமாக பெறுகிறார்.

சரத்குமார் : சரத்குமார் ஹீரோவாக நடித்ததை காட்டிலும் இப்போது செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பி வருகிறார். அதன்படி சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் ரசிகர்களை கவர்ந்தது. இப்போது அடுத்த அடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார். அதுவும் ஜெட் வேகத்தில் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். ஒரு படத்திற்கு 7 முதல் 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

Also Read : வில்லனா இருந்த உன்ன ஹீரோவா ஆக்கினது தப்பா போச்சு.. இமேஜ் பார்க்கும் சரத்குமார், புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர்

Next Story

- Advertisement -