அப்பவே ரஜினிக்கு நிகராக ரசிகர்கள் கொண்ட 3 நடிகர்கள்.. இப்ப தலைவர் மட்டும் ஒன் மேன் ஆர்மி

ரஜினிகாந்த் தன்னுடைய கடின உழைப்பால் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். ஆனால் அப்போதைய காலகட்டத்தில் ரஜினிக்கு சரிசமமாக 3 நடிகர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் சில காரணங்களால் அவர்களால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. இதற்கு சினிமா அரசியலின் முக்கிய காரணமாக இருந்தது.

மூன்று நடிகர்களும் தமிழ் சினிமாவில் ரஜினி,கமலுக்கு அடுத்தபடியாக கோலோச்சி வந்தனர். இவர்களுக்கு ரசிகர் பட்டாளங்கள் அதிகமாயின குறிப்பாக இவர்களுக்குப் பெண் ரசிகர்களின் ஆதரவு மிகுதியாக இருந்தது

முரளி : சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரே நடிகர் முரளி. இவர் நடிப்பில் வெளியான இதயம் படம் ரசிகர்களை பெருமளவு ஏற்கப்பட்டது. ஒருகாலத்தில் முரளியை கடவுளாய் பார்த்த ரசிகர்களும் உண்டு. ஆனால் சிலர் சூழ்ச்சியால் ஒரு நிலையான இடம் முரளிக்கு கிடைக்காமல் போனது.

மோகன் : மோகன் தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா கண்ட படங்களை கொடுத்துள்ளார். அதனால் இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்ற பெயரும் உள்ளது. மைக் மோகன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் பேவரைட் பாடல்களாக உள்ளது. அப்போதைய காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு நிகராக வந்து கொண்டிருந்தார். இவரை வளரவிடாமல் பல ஹீரோக்கள் தடுத்தனர் என்று கூறுவார்கள்.

ராமராஜன் : 80-களின் இறுதியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் உலக அளவில் இவரை ஃபேமஸ் ஆக்கியது. இந்தப் படம் மதுரையில் ஒரு திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்தது. அப்போதைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் ஒப்பிடும்போது இவரது படங்கள் ரசிகர் மத்தியில் பிரபலமாக இருந்தது.

இவர்கள் 3 பேரும் ஒவ்வொரு விஷயத்திற்காக தங்களின் மார்க்கெட்டை அவர்களே கெடுத்துக்கொண்டனர். குறிப்பாக ராமராஜன் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கடைசிவரை விடாப்பிடியாக நின்று சினிமாத்துறையில் கேரியரை தொலைத்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்