சமூக வலைத்தளங்களில் போலியான கணக்கு.. பரபரப்பான அறிக்கை வெளியிட்ட தளபதி விஜய்

தளபதி மகன், மகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலானது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் தனது நண்பர்களுடன் வெளிநாட்டில் நடனமாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படியிருக்க இவர்கள் இருவருக்குமே சமூக வலைத்தளங்களில் உண்மையான அக்கௌன்ட் இல்லை என்று விஜய் தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதாவது விஜய் மகன், மகளின் பெயரில் போலியான அக்கௌன்ட் உள்ளதாகவும் அதனை ரசிகர்கள் யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

vijay-son-sanjay-friends-photo
vijay-son-sanjay-friends-photo

இது போன்ற போலி கணக்குகளின் மூலம் விளம்பரம் தேடும் மர்ம நபர்களின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -