தமிழில் இயற்கை, வர்ணஜாலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை குட்டி ராதிகா. பெங்களூரைச் சேர்ந்த இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அவர்களை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் குமாரசாமிக்கு இரண்டு மனைவிகள் என்று பாரதிய ஜனதா கட்சியினர் விமர்சித்து வந்தனர்.
குமாரசாமி இடைத்தேர்தல் நடைபெறும் சிந்தகி தொகுதியில் ஜனதா தள கட்சி பிரமுகரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்தை பற்றி அவர் பேசியுள்ளார்.
அதாவது தன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இரண்டாவது திருமணம் செய்தது தான் என்றும், பின்னர் அதை திருத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் நான் எதையும் மூடி மறைக்க வில்லை என்று கூறியுள்ளார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பாஜக விமர்சிப்பது சரியல்ல என்றும் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் உண்டு. நானும் பாஜகவின் ரகசியங்களை வெளிப்படையாக கூறினால் அனைவரும் வீதிக்கு வந்து விடுவார்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது எனக்கு குட்டி ராதிகா என்பவர் யார் என்றே தெரியாது, தெரியாதவரை பற்றி நான் என்ன சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.