எல்லாம் இந்த அனிருத் செய்யும் வேலை.. கவிஞர்கள் பொழப்புக்கு உலைவைக்கும் 3 நடிகர்கள்

பொதுவாக தமிழ் சினிமாவில் பாட்டு எழுதும் கவிஞர்களுக்கு பஞ்சமே கிடையாது. வைரமுத்து, தாமரை, கபிலன் என பலர் உள்ளனர். இப்படி இருக்கையில் புதிதாக மூன்று கவிஞர்கள் உருவாகி வருகிறார்கள். அந்த மூன்று பேருமே அனிருத்தின் நெருங்கிய நண்பர்கள் தான். மேலும் கவிஞர்கள் போல் எழுதாமல் இவர்களது வரிகளே வித்தியாசமாக இருக்கும்.

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகளையே பாடல் வரிகளில் போட்ட அசத்தியுள்ளனர். அந்தப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற தொடங்கியதால் தொடர்ந்து இவர்கள் தங்களுடைய படங்களில் பாடல் வரிகளை எழுதி வருகிறார்கள். அந்த 3 பிரபலங்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Also Read :அனிருத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா.. ஓரம் கட்டப்பட்ட யுவன்

தனுஷ் : ஆரம்பத்தில் அனிருத், மற்றும் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தனுஷின் பெருபான்மையான படங்களில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 3 படத்தில் தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் தொடர்ந்து தனுஷ் பல படங்களில் பாடல் வரிகள் எழுதி வருகிறார்.

சிவகார்த்திகேயன் : சமீபகாலமாக வசூல் மன்னனாக திகழ்ந்துவரும் சிவகார்த்திகேயன் பன்முகத்தன்மை கொண்டவர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலை எழுதி இருந்தார். அந்தப் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார். இந்த பாடல் குழந்தைகள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

Also Read :எல்லாமுமாய் இருந்தவரை நம்ப வைத்து கழுத்தறுத்த சிவகார்த்திகேயன்.. காற்றில் பறந்த வாக்குறுதி

விக்னேஷ் சிவன் : இயக்குனரான விக்னேஷ் சிவன் தன்னுடைய முதல் படமான போடா போடி படத்தில் இருந்து பாடல்களை எழுத தொடங்கிவிட்டார். மேலும் தனக்கு சிம்பு தான் பாடல் வரிகளை எழுத உத்வேகம் கொடுத்தார் என பல பேட்டிகளில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார்.

Also Read :நயன்தாராவின் குழந்தையை சுமந்த தாய் யார் தெரியுமா.? உச்சகட்ட அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

Next Story

- Advertisement -