எப்போதுமே ஹீரோயின்கள் சினிமாவில் சில காலங்கள் மட்டுமே கதாநாயகியாக நடிக்க முடிகிறது. ஆனால் ஹீரோக்களுக்கு அந்த வயது கட்டுப்பாடு இல்லை. அவர்கள் பல வருடங்களாக கதாநாயகர்கள் ஆகவே நடித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளே அந்த ஹீரோக்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யாவை விட ஐந்து வயது குறைவான நடிகை அவருக்கு அம்மாவாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் சூர்யாவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் ஒரு ஹீரோவாக அவரை நிலை நிறுத்திய படம் நந்தா. பாலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகை ராஜஸ்ரீ சூர்யாவின் அம்மாவாக நடித்திருந்தார்.
ராஜஸ்ரீ கருத்தம்மா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்த ராஜஸ்ரீ நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சின்னத்திரை மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் ராஜஸ்ரீ முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ராஜஸ்ரீ ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது தன்னுடைய திரை வாழ்க்கையை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நந்தா படத்தை பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதில் பேசிய ராஜஸ்ரீ இப்போது வரைக்கும் சூர்யா என்னுடைய ஒரு நல்ல நண்பர் என கூறியிருந்தார்.
மேலும் சூர்யா என்னைவிட ஐந்து வயது பெரியவர் என்றாலும் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நான் சூர்யாவை அண்ணன்னு கூப்பிட்டா அப்படி கூப்பிட கூடாதுன்னு சொல்லுவாரு. ஏன் இப்போது அண்ணனுக்கு கூப்பிட்டாலும் சூர்யாவுக்கு பிடிக்காது என ராஜஸ்ரீ கூறினார்.
சமீபத்தில் பாலா சாரை சந்தித்தபோது அவரிடம் படம் பண்ணலாமா என கேட்டதற்கு நீ மறுபடியும் நடிக்கிறேனா கண்டிப்பா படம் பண்ணலாம்னு சொன்னாரு என ராஜஸ்ரீ சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் ஒரு திறமையான நடிகையாக இருந்தும் சினிமாவில் ராஜஸ்ரீயால் நிலைத்து நிற்க முடியவில்லை.