2 நாள் ஆகியும் அசீமை விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்.. இவ்ளோ எதிர்ப்புக்கு இப்படி செஞ்சா தப்பிச்சிங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அசீமுக்கு ஒரு தரப்பு எப்படி ஆதரவு இருக்கிறதோ அதற்கு நேர் மாறாக எதிர்ப்பும் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டம் அசீமுக்கு தான் கிடைத்தது. கடந்த சீசன்களில் விஜய் டிவி பிரபலங்களுக்கு தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதேபோல் பிக் பாஸ் சீசனிலும் அசீம் விஜய் டிவி என்பதால் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது.

Also Read : அசீம், விக்ரமன், ஷிவின் என பைனல் லிஸ்ட் வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

அசீம் எந்த ஒரு விஷயம் இருந்தாலும் கோபமாகத்தான் அதை கையாள கூடியவர். அசீமின் வெற்றியால் கடந்த இரண்டு நாட்களாக அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். உண்மையான வெற்றி என்பது விக்ரமனுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். அறம் தோற்றது அநீதி வென்றது என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது.

பிக் பாஸ் வரலாற்றிலேயே கடந்த 6 சீசன்களில் டைட்டில் வின்னர் இவ்வளவு ட்ரோல் செய்யப்பட்டுள்ளார் என்பது அசீமுக்கு தான் நேர்ந்துள்ளது. ஆகையால் வெற்றி பெற்ற சந்தோஷத்தை கூட முழுமையாக கொண்டாட முடியாமல் அசீம் உள்ளார். இவ்வளவு ட்ரோலுக்குப் பிறகு விஜய் டிவி தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் விக்ரமன் வெற்றியாளர் என்று மீண்டும் அறிவிக்க பட்டால் மட்டுமே முடியும்.

Also Read : விக்ரமன் தோல்விக்கு இவர் தான் காரணம்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்

அதுவும் அசீம் முன் வந்து தனக்கு இந்த பட்டம் சரியானது இல்லை என்று கூறி அவரே விக்ரமனிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே ரசிகர்கள் விஜய் டிவி மீது உள்ள எதிர்ப்பை குறைத்துக் கொள்வார்கள். விஜய் டிவி தனது டிஆர்பியை தக்க வைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

ஆகையால் விஜய் டிவி விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முற்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். அப்படி அறிவித்தால் இது விக்ரமனுக்கு மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும். மேலும் அறம் வென்றதாகவும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

Also Read : பொண்டாட்டிங்க தொல்லையால் மார்க்கெட் இழந்த நடிகர்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்தும் ப்ரோஜனம் இல்ல

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்