பிக் பாஸ்க்கு சரியான பதிலடி கொடுத்த எதிர்நீச்சல்.. பத்த வச்சிட்டியே பரட்டை, ஜோவிகாக்கு எதிராக திரும்பும் பூகம்பம்

Bigg Boss and Ethirneechal Serial: நல்ல கதை, வசனம் என ஒரு சீரியலுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் முன்வைத்து வருகிறது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல். அத்துடன் படித்து பட்டம் பெற்ற பெண்கள் திருமணம் ஆன பிறகு வீட்டிற்குள்ளே முடங்கிக் கொண்டு சமையல்காரியாகவும், புருஷங்களுக்கு பணிவிடை செய்யும் வேலைக்காரியாகவும் இருக்கும் பிற்போக்குத்தனத்தை வேரோடு புடுங்கி விட வேண்டும். என்பதை தெளிவுபடுத்தும் விதமாக எதிர்நீச்சல் சீரியல் அனைவரது மனதிலும் புகுந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது வருகின்ற சீசன் 7 நிகழ்ச்சியும் சண்டை சச்சரவு என ஆரம்பித்திருக்கிறது. அதிலும் ஹாட் டாபிக்காக ஜோவிகாவின் பேச்சு தான் அதிரடியாக அனைத்து பக்கங்களிலும் பேசும் பொருளாக போய்க் கொண்டிருக்கிறது.

அதாவது விசித்ரா, ஜோவிகாவிடம் படிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்தும் சொல்லும் விதமாக பேசினார். இதைக் கேட்டு பொறுக்க முடியாமல் படிச்சவங்க எல்லாம் முன்னேறல்ல. எனக்கு என்ன வருமோ, எதுல ஆர்வம் இருக்கிறதோ அதை நான் தேர்ந்தெடுத்து அதன் வழியே நான் என் பயணத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.

அத்துடன் ஆர்வக்கோளாறில் படிப்புக்கு எதிராகவும் சில வார்த்தைகளை சொல்லி பேசி இருக்கிறார். இதை பார்த்ததிலிருந்து பாமர மக்கள் எங்களுக்கு படிப்பு தான் முக்கியம். அதுதான் எங்களுடைய சொத்து. அதை என் பிள்ளைகளுக்கு கொடுப்பதற்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டு சம்பாதிக்கிறோம் என்று ஆதங்கத்துடன் பதில் அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலும் அவர்கள் பங்கிற்கு ஜோவிகாவிற்கும், பிக் பாஸ்க்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் அவர்களும் ரெண்டுங்கெட்ட பதிலை கொடுத்து சரியான கருத்தை முன் வைக்கவில்லை என்ற சில குற்றச்சாட்டுகளும் வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் குணசேகரனின் மருமகளை வைத்து ஜோவிகாவிற்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது.

அதாவது நேற்றைய எபிசோடில் ரேணுகா, படிப்பின் முக்கியத்துவத்தையும் அதனுடைய ஆழம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் ஜான்சி ராணியிடம் புட்டு புட்டு வைத்திருப்பார். அத்துடன் படிக்காத உங்களுக்கு எல்லாம் படிப்பின் அருமை எப்படி புரியும் என்பதையும் சொல்லி இருப்பார். ஏற்கனவே ஜோவிகாவிற்கு எதிராக பூகம்பம் கிளம்பி வரும் நிலையில் எதிர்நீச்சல் சீரியல் அவர்கள் பங்குக்கு சரியான நேரத்தில் பற்ற வைத்து விட்டார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்