Ethir neechal Serial changed its track: எதிர்நீச்சல் சீரியலின் மைய கருத்து என்ன, எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதே தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. முதலில் இந்த சீரியல் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் தங்களது உரிமைகளை நிலை நிறுத்திக் கொண்டு போராடும் பெண்களின் கதையாக பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில் அப்பத்தா, கதாபாத்திரம் இருக்கும் வரையில் இந்த சீரியலுக்கு அமோக வரவேற்பு இருந்து வந்தது. அதன் பின்னர் இந்த சீரியல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து புது புது கதாபாத்திரங்களை கொண்டு வந்து கதையையே திசை திருப்பி விட்டனர்.
எதிர்நீச்சல் நாடகம் ஆரம்பத்தில் சொத்துக்களையும் பெண்களையும் முன்னேற்றத்தையும் மையமாக வைத்து கதை நகர்ந்தது. அந்த சொத்துக்களை வைத்து குணசேகரன் வீட்டு மருமகளுக்கு அப்பத்தா உறுதுணையாக நின்று தூக்கி விட்டு முன்னேற்றுவதை போல் காட்டப்பட்டது.
குணசேகரனால் சீரழியும் உறவு முறைகள்
அதன் பின் முழுவதுமாக இப்பொழுது கதை வேறு ஒரு பாதையை நோக்கி செல்கிறது. பெண்களை போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்வது, சொந்த அப்பாவே மகளுக்கு போதை மருந்து கொடுத்து கடத்துவது என சமூகத்திற்கு தேவையில்லாத ஒன்றை காட்டுகிறது.
அது மட்டும் இன்றி மகள் வாழ்க்கையை சீரழிக்கும் தந்தையாக குணசேகரனின் கதாபாத்திரத்தை காட்டுகின்றனர். இந்த நாடகத்தில் தம்பிகளின் மனைவியாரை மரியாதை இல்லாமல் இஷ்டத்துக்கு பேசுவதும் அவர்களை மிரட்டுவதுமாய் இந்த கதாபாத்திரம், ஒரு அடக்குமுறை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இப்படி மீண்டும் அந்த வீட்டுப் பெண்களை குணசேகரன் வளர விடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். மற்ற நாடகத்தைப் போலவே இப்பொழுது இந்த நாடகமும் மவுசு குறைந்து வருகிறது. முன்னேற துடிக்கும் பெண்கள் கடைசி வரை இவருடன் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயிப்பது போல் எந்த ஒரு காட்சிகளும் இல்லை என்பதுதான் எதிர்நீச்சலின் வருத்தம்.