Ethirneechal: குணசேகரனின் கொட்டத்தை அடக்கி தோற்கடிக்க போகும் ஈஸ்வரி.. ஜகஜால கில்லாடியாய் இருக்கும் முரட்டு பீஸ்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் ஒட்டுமொத்த ஆணவத்தின் மறு உருவமாக ஈஸ்வரியை கைக்குள்ளே போட்டு அடக்க வேண்டும் என்று வக்ர புத்தியில் விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் இதை நான் விடுவதாக இல்லை. இதற்கு நான் என்ன பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணி வைத்திருக்கிறேன் என ஈஸ்வரி களத்தில் இறங்கி விட்டார்.

அதாவது குணசேகரன் பொருத்தவரை விவாகரத்து பண்ணி விட்டால் ஒரு பெண்ணிடம் தோற்று விட்டோம் என்று அவமானம் வந்துவிடும் என்பதினால் தான் விவாகரத்துக் கொடுக்க மறுக்கிறார். ஆனால் இதுதான் குணசேகருக்கு மிகப்பெரிய தோல்வி என்றால் அதை நான் கண்டிப்பாக செய்து முடிப்பேன் என்று ஈஸ்வரி பிடிவாதமாக இருக்கிறார்.

அந்த வகையில் ஈஸ்வரி எல்லாம் தெரிந்த ஒரு வக்கீலை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசும் விதமாக பதிலடி கொடுக்கிறார். அதாவது நான் தான் ஈஸ்வரியின் லாயர். நீங்கள் விவாகரத்துக் கொடுக்க மறுத்தால் நான் சட்டப்படி உங்களை கோர்ட்டுக்கு இழுத்து இந்த கேசை ஈஸ்வரிக்கு சாதகமாக முடித்து விடுவேன் என்று சவால் விடுகிறார்.

கதிருக்கு சப்போர்ட்டாக பேசிய ஜனனி

ஆனால் குணசேகரன் எது வேண்டுமானாலும் நான் பார்த்துக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்ற பண திமிரில் ஆணவத்தில் ஈஸ்வரிக்கு சப்போர்ட்டாக வந்த லாயரிடம் பேசுகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கதிர் கொஞ்ச நேரத்தில் அந்நியனாக மாறி நந்தினியை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார்.

இதைப் பற்றி நந்தினி கவலைப்படும் பொழுது ஜனனி மற்றும் ஈஸ்வரி அவர்கள் பக்கமும் நியாயம் இருக்கிறது. அவர்களுக்கு நம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தால் மட்டும்தான் நம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அதனால் இனி கிண்டல் அடிப்பது நக்கலாக பேசுவது எதுவும் வேண்டாம். நீங்கள் போய் கதிர் மாமாவை சமாதானப்படுத்துங்கள் என்று ஜனனி அனுப்பி வைக்கிறார்.

அதன்படி நந்தினி, கதிர் இருக்கும் ரூமுக்கு போகிறார். போனதும் கதிரிடம் சமாதானமாக பேச முயற்சி எடுக்கிறார். ஆனால் அப்பொழுதும் கதிர் கோபத்துடனே நந்தினியிடம் பேசுகிறார். பிறகு இதற்குள் புகுந்த தாரா பாப்பா வழக்கம்போல் செண்டிமெண்டாக பேசி கதிரை லாக் செய்து விட்டார். உடனே கதிரும் நான் செய்தது தவறுதான் என்று நந்தனிடம் மன்னிப்பு கேட்டு ரொமான்ஸ் பண்ணுவதற்கு புகுந்து விட்டார்கள்.

இது தெரியாமல் குணசேகரன், ஈஸ்வரி, ஜனனி மற்றும் சக்தி அனைவரும் கதிருக்கும் நந்தினிக்கும் சண்டை இருக்கிறது என்ற பயத்தில் கதவை தட்டுகிறார்கள். உடனே தாரா பாப்பா அவர்களுக்குள் சண்டை எல்லாம் இல்லை காதல் மலர்ந்து விட்டது என்று சொல்லி ஒரு கிளுகிளுப்பை அனைவருக்கும் உருவாக்கிக் கொடுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து கதிர் இனி முழு சப்போர்ட்டையும் நந்தினிக்கு கொடுத்து பிசினஸ் பண்ணுவதற்கு ஊக்குவிக்கப் போகிறார். இத்தனை நாளாக முரட்டு பீசாக இருந்த கதிர், எப்பொழுது எந்த நேரத்தில் மாற வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் ஜகஜால கில்லாடியாக தான் காய் நகர்த்துகிறார்.

Next Story

- Advertisement -