Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், சரவணனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த குடும்பமும் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் செந்தில், அண்ணனுக்காக மேட்ரிமோனி மூலம் ஒரு வரன் பார்த்து வைத்திருக்கிறார்.
இதை எப்படியாவது அப்பாவிடம் சொல்லி சம்மதத்தை வாங்க வேண்டும் என்று பாண்டியனிடம் சொல்கிறார். அவரும் சம்மதம் தெரிவித்தார், ஆனால் அங்கே ஒரு டுவிஸ்டையும் வைத்து விட்டார். அதாவது சரவணன் அந்த பெண்ணை பார்ப்பதற்கு தனியாக போக வேண்டாம் குடும்பத்துடன் நாம் அனைவரும் சேர்ந்து போகலாம் என்று சொல்லுகிறார்.
உடனே வேறு வழி இல்லாமல் அனைவரும் சேர்ந்து சரவணன் உடன் ஹோட்டலுக்கு போகிறார்கள். அந்த ஹோட்டலுக்கு அந்த பெண் வந்ததும் சரவணன் தனியாக பேச போகிறார். ஆனால் சரவணன் அங்கு திருட்டு மொழி முழித்துக் கொண்டு வெளியில் இருக்கும் குடும்பத்தை அடிக்கடி எட்டிப் பார்த்து வந்ததால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
உடனே என்ன என்று கேட்கும் பொழுது சரவணன் என் குடும்பத்தில் இருப்பவர்களும் வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் உனக்கும் எனக்கும் செட்டாகாது என்று அந்த பெண் டாடா காட்டிவிட்டு போய்விட்டார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்கள். அதன் பின் பாண்டியன் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு போகும் சூழல் ஏற்படுகிறது.
என்டரி கொடுக்கப் போகும் சரவணன் ஜோடி
அப்பொழுது பாண்டியன், கோமதி மற்றும் மூத்த மகன் சரவணன் போகிறார்கள். அதே நிகழ்ச்சிக்கு கோமதியின் தூரத்து சொந்தக்காரர்களாக ஒரு குடும்பம் வருகிறார்கள். அந்த குடும்பத்துடன் ஒரு பெண்ணும் வருகிறார். அவர் தான் சரவணனுக்கு வருங்கால மனைவியாக வரப்போகிறார். அவர் வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்த கதாநாயகி சரண்யா தான்.
இவர் தான் பாண்டியனின் மூத்த மருமகளாக சரவணனுக்கு ஜோடியாக சேரப் போகிறார். எப்படியோ ஒரு வழியாக பெண் பார்க்கும் விஷயத்திற்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிட்டது. ஆனாலும் இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோமதியின் அண்ணன்கள் இரண்டு பெரும் சூழ்ச்சியில் பல சதித்திட்டங்களை திட்ட போகிறார்கள்.
அதை எல்லாம் முறியடித்து பாண்டியனின் மூத்த மகனுக்கு கல்யாணம் நடக்குமா என்பதுதான் வரப்போகிற எபிசோடுகளில் சுவாரஸ்யமாக அமையப் போகிறது.