கருடனுக்கு வந்த காஸ்ட்லி கிப்ட்.. 50 கோடில சொக்கனுக்கு மிஞ்சினது என்னமோ அம்புட்டுதான்

Costly Gift to soori: பரோட்டா சூரி இன்று விடுதலை, கருடன் சூரியாக வளர்ந்து நிற்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் காமெடியனாக பார்த்த சூரியை இன்று மக்கள் வேறு ஒரு விதமாய் கொண்டாடி வருகின்றார்கள். கருடன் படத்திற்கு சூரி மூன்று கோடிகள் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.

எதிர் நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கருடன் படம், சூரிக்கு விடுதலை படத்தை போல் இன்னொரு மைல்கல் என்று சொல்லலாம். இந்த படம் கொடுத்த லாபத்தால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பூரிப்பில் இருக்கின்றனர்

பெரிய ஹீரோக்களுக்கு இணையாக இன்று சூரியும் வசூல் சாதனை படைத்து வருகிறார். தமிழ்நாட்டில் மட்டும் கருடன் படம் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையையும் நல்ல விலைக்கு அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் வசூல் செய்த காசுகள் எல்லாம் வட்டி கட்டுவதற்கே பயன்பட்டுள்ளது. அதிக வட்டிக்கு பைனான்ஸ் வாங்கி இந்த படத்தை எடுத்துள்ளனர்

சமீபகாலமாக ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் நடிகர் மற்றும் இயக்குனருக்கு விலை உயர்ந்த கிப்ட் கொடுப்பது பேசனாகி வருகிறது. இந்த படத்தை தயாரித்தது வெற்றிமாறன் மற்றும் அவரது நண்பர்கள். லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் சூரிக்கு ஒரு காஸ்ட்லி கார் கிப்ட் கொடுக்கப்பட்டது.

50 கோடில சொக்கனுக்கு மிஞ்சினது என்னமோ அம்புட்டுதான்

இதுவரை சூரியிடம் இல்லாத கார் எது என்று கேட்டறிந்து அதை பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.ஏற்கனவே சூரியிடம் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹோண்டா சிட்டி, போன்ற கார்கள் இருக்கிறது. இப்பொழுது புதுவராக அவருக்கு ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரை கருடன் வெற்றிக்காக லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சூரிக்கு கொடுத்துள்ளது . இதன் விலை கிட்டத்தட்ட ஒன்றரை கோடியில் ஆரம்பித்து நான்கு கோடிகள் வரை இருக்கும். இதே மாடல் கார் தனுஷ், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களிடமும் இருக்கிறது.

Next Story

- Advertisement -