கோல்டன் விசா வாங்கியாச்சு.! துபாயில் கமல் அடிபோடும் அடுத்த டார்கெட்

கமல் தற்போது மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். அவரின் இந்த சந்தோஷத்திற்கு முக்கிய காரணம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம்தான். இந்த படத்தின் மூலம் கமல் பல கோடிகள் லாபம் பார்த்துள்ளார்.

எங்கு திரும்பினாலும் இப்போது விக்ரம் திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் ஓடி கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கமல் வெளிநாடுகளிலும் அதிக பேமஸ் ஆகி இருக்கிறார். மேலும் அவருக்கு வெளிநாடுகளில் ஏகப்பட்ட மரியாதையும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

அந்த வரிசையில் துபாய் அரசாங்கம் தற்போது ஆண்டவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது கமலுக்கு துபாய் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. முன்னதாக நடிகர் சிம்புவுக்கும் இந்த கோல்டன் விசா கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோல்டன் விசாவின் மூலம் கமல் எப்போது வேண்டுமானாலும் துபாய் நாட்டிற்கு சென்று வர முடியும். அவருக்கு எந்த ஒரு விசா தடையும் அங்கே இனிமேல் கிடையாது. இதனால் ஆண்டவர் தற்போது உற்சாக மிகுதியில் ரொம்பவும் பூரிப்படைந்து இருக்கிறாராம்.

ஏற்கனவே விக்ரம் திரைப்படம் அவரை பல இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. மேலும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கமல் சென்றபோது அங்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அவர் நெகிழ்ந்து போய் உள்ளார். இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் கோல்டன் விசா அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கமல் தற்போது துபாயில் வீடு வாங்கும் பிளானிலும் இருக்கிறாராம். ஆனால் அவர் ஏற்கனவே அங்கு ஒரு வீடு வாங்கி விட்டதாகவும் தற்போது திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் துபாய் அரசு கொடுத்த இந்த அங்கீகாரம் கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Next Story

- Advertisement -