வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ரோகிணியை ஆட்டிப்படைக்க போகும் டோரா புஜ்ஜி.. முத்துவிடம் கையும் களவுமாக சிக்க போகும் விஜயா மருமகள்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து ஆசை ஆசையாக மீனாவிற்கு பூக்கடையை வீட்டிற்கு முன்னாடி ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் இதை கெடுக்கும் முயற்சியில் ரோகினி மற்றும் விஜயா அதை காலி பண்ண சதி செய்து விட்டார்கள்.

அதனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணின மீனாவுக்கு முத்து ஆறுதல் கூறினார். இருந்தாலும் மீனாவை இப்படியே அடுப்பாங்கரையில் வேலைக்காரி மாதிரி வைத்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பைக்கை வாங்கி கொடுக்கிறார். அந்த பைக் மூலம் பூ ஆர்டர் எடுத்து வியாபாரத்தை தொடர்ந்து செய்யலாம் என்று முத்து ஒரு சர்ப்ரைஸ் பண்ணி விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத முத்துவின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டார்கள். ஆனால் இதைப் பார்த்த ரோகினி மற்றும் விஜயா வயிற்று எரிச்சலில் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் மனோஜ் இதெல்லாம் பார்த்து ரோகினி இடம் என்னுடைய தம்பிகள் இரண்டு பேரும் தொடர்ந்து வெற்றி பெற்று நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நான் மட்டும் எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் தண்ணில போட்ட கல்லு மாதிரி ஒரே இடத்தில் நிற்கிறேன் என்று சொல்கிறார். எனக்கு ஏதாவது சொந்த பிசினஸ் இருந்தால் அதில் கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கு என ரோகிணி இடம் புலம்புகிறார்.

கனடாவில் இருந்து வந்த ஜீவா

உடனே வழக்கம் போல் ரோகிணி குறுக்குப் புத்தியில் யோசிக்க ஆரம்பித்து விடுகிறார். அதாவது மனோஜை ஏமாற்றி 27 லட்ச ரூபாயை எடுத்துட்டு போன ஜீவாவை பற்றி ரோகினி கேட்கிறார். இதை கண்டுபிடிக்கும் முயற்சியில் மனோஜ் மற்றும் ரோகினி இறங்குகிறார்கள். அப்படி இந்த பணம் கிடைத்துவிட்டால் யாரிடமும் சொல்லாமல் நாம் வைத்துக் கொள்ளலாம் என்று ரோகினி யோசிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பணத்தை எடுத்துட்டு கனடாவுக்கு போன ஜீவா, டோரா புஜ்ஜி ஸ்டைலில் மறுபடியும் இந்தியாவிற்கு வருகிறார். சென்னைக்கு வந்ததும் முத்துவின் காரில் தான் போய்க்கொண்டிருக்கிறார். முத்துவுக்கு ஜீவா மூலம் அனைத்து உண்மைகளும் தெரிய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் ரோகிணியை ஆட்டிப்படைக்க சரியான ஆளு ஜீவாவாகத்தான் இருக்கப் போகிறார்.

இதன் மூலம் ரோகினியின் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறப்போகிறது. கூடிய சீக்கிரத்தில் முத்துவிடம் இந்த ரோகினி கையும் களவுமாய் மாட்டப் போகிறார்.

- Advertisement -

Trending News