தவறான கண்ணோட்டத்தில் வெளிவந்த லவ் டுடே விமர்சனம்.. அதுக்கு செல்வராகவனை இழுத்து இருக்க வேண்டாம்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் லவ் டுடே படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இப்படம் வசூலும் வாரி குவித்து வருகிறது. இளம் இயக்குனரான பிரதீப் இதற்கு முன்னதாக குறும்படங்களை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் தான் வெற்றி பெறும் என்ற நிலை மாறி சில தவறான கருத்துக்களை சொல்லும் படங்கள் பெரிய அளவில் வரவேற்கப்படுகிறது. அதற்கு இப்போது உதாரணமாக தான் லவ் டுடே படம் அமைந்துள்ளது.

Also Read :நான்கே நாட்களில் போட்ட காசை டபுள் மடங்காக எடுத்த லவ் டுடே.. மொத்த வசூல் விவரம்

இந்த படம் இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தாலும் அவர்களுக்கு தவறான கருத்துக்களை சொல்லும் விதமாக அமைந்துள்ளது. மேலும் அவர்கள் செய்யும் தவறை வெட்ட வெளிச்சமாக இப்படம் காட்டியுள்ளது. அதைப் பார்த்தும் ரசிகர்கள் இப்படத்தை வரவேற்கிறார்கள்.

மேலும் மறைமுகமாக வைக்கப்பட்ட இந்த விஷயங்கள் தற்போது இப்படத்தின் மூலம் எல்லோருக்கும் தெரிந்துள்ளதால் சந்தேகத்தின் பார்வையில் பார்ப்பவர்களுக்கு இந்த படம் உதாரணமாக அமைந்துள்ளது. சிலர் இதே போல் தான் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படமும் வெற்றி பெற்றதாக குறிப்பிட்டிருந்தனர்.

Also Read :காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான இந்த படம் லவ் டுடே பாணியில் தான் அமைந்திருந்தது. இந்தப் படமும் ரசிகர்களுக்கு தவறான கருத்தை தான் புகுத்தது. ஆனால் அப்போதே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற தனுஷ் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இதே விஷயம் தான் தற்போது பிரதீப் படத்திலும் நடந்துள்ளது. இந்த படம் வெற்றி பெற்றாலும் இளைஞர்களுக்கும், சமுதாயத்திற்கும் தவறான விஷயங்களை முன்னிலைப்படுத்துகிறது. இதனை தமிழ் சினிமா தவிர்த்து நல்ல கருத்துள்ள படங்களை மட்டுமே கொடுக்கலாம்.

Also Read :பிளாக் ஷீப் போல சினிமாவில் கால்பதிக்கும் பிரபல யூடியூபர்.. லவ் டுடே பிரதீப்புக்கு இவர் தான் போட்டியா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்