காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

படத்தை பிரமாண்டமாக பெரிய பெரிய நடிகர்களை வைத்து எடுத்தால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. அதற்கு மாறாக கதையும், அந்தக் கதையை சொல்லும் விதமும் முக்கியம் என்பதை சமீபத்தில் வெளிவந்த கன்னட படமான காந்தாரா நிரூபித்திருக்கிறது.

தற்போது இந்த படத்திற்கு போட்டியாக வந்திருக்கிறது சமீபத்தில் தமிழில் வெளியான லவ் டுடே திரைப்படம். இந்த இரண்டு படங்களிலும் இயக்குனர்களை கதாநாயகன்களாக நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி காந்தாரா படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்பது அந்த பட குழுவுக்கு தெரியாது.

Also Read: சின்ன கல்லு பெத்த லாபம், கம்மி பட்ஜெட்டில் பல கோடி லாபம் பார்த்த காந்தாரா.. 6 மடங்கு அள்ளிய தயாரிப்பாளர்

காந்தாரா படத்தை தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை வெறும் 15 கோடிக்கு தயாரிப்பு 100 கோடிக்கு மேல் லாபத்தை பார்த்திருக்கிறது. நான்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்ட இந்த படம், கர்நாடகாவில் மட்டும் 100 கோடி வசூலை எட்டிய நிலையில், மற்ற மாநிலங்களில் சுமார் 40 கொடியை பாக்ஸ் ஆபீஸில் குவித்திருக்கிறது.

இதுமட்டுமின்றி இந்தியாவைத் தவிர வெளிநாடுகளிலும் 10 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது. இவ்வாறு பட்ஜெட்டை விட ஆறு மடங்கு அதிக லாபத்தை பார்த்திருக்கிறது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

Also Read: வசூலில் டாப் கியரில் செல்லும் லவ் டுடே.. இரண்டு நாளைக்கே இவ்வளவா?

ஆகையால் முதலில் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிட்டனர். தற்போது காந்தாரா கன்னடத்தில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் திரையரங்கில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதேபோன்று லவ் டுடே படமும் வெளியான இரண்டே நாட்களில் தமிழகத்தில் 10 கோடிக்கு மேலும்,உலகம் முழுவதும் 15 கோடிக்கு மேல் வசூலை குவித்து மிரள வைத்தது. ஆகையால் இப்போது லவ் டுடே படக்குழுவினரும், காந்தாரா படக்குழுவினர் செய்த ட்ரிக்கை அப்படியே ஃபாலோ செய்து இருக்கின்றனர்.

Also Read: தமிழ் படங்களை அலறவிட்ட 5 கன்னட படங்கள்.. தளபதியை டீலில் விட்ட அந்த படம்

தமிழில் லவ் டுடே திரைப்படம் நல்ல வசூலை பெற்றதால், தற்போது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட படத்தின் இயக்குனரின் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் முடிவெடுத்து இருக்கிறார். இதன் பிறகு அக்கட தேசத்திலும் பிரதீப் ரங்கநாதன் மற்ற நடிகர்களின் படங்களுக்கு டாப் கொடுக்க போகிறார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்