பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர், முல்லைக்கு குழந்தை பிறக்குமா? வெளியான ரிப்போர்ட் விவரம்

விஜய் டிவியில் கூட்டுக் குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் தனம் மற்றும் மீனா இருவருக்கும் குழந்தைகள் இருக்கும் நிலையில் திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் முல்லைக்கு குழந்தை இல்லாததால் ஊரார் மற்றும் குடும்பத்தார் கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கினார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த முல்லையை மருத்துவமனைக்கு கதிர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரையும் முழு பரிசோதனை செய்தபின் அதற்கான ரிப்போர்ட் குறித்து டாக்டர் கதிரிடம் அதிர்ச்சியான தகவலை கூறியிருக்கிறார்.

சிறுவயதில் முல்லைக்கு கருப்பையில் அடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் முல்லைக்கு இயற்கையாக குழந்தை பெறும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் டாக்டர் கதிரிடம் கூறியிருக்கிறார். டாக்டர் கதிரிடம் கூறும்போது முல்லையை வெளியில் அனுப்பி விட்டனர்.

எனவே முல்லை இந்த முடிவை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார் என்று கதிர் கலக்கம் அடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரோமன்ஸ் ஜோடிகளான கதிர் முல்லைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இருப்பினும் டாக்டர் நவீன முறை சிகிச்சையால் முல்லையை குணப்படுத்தி குழந்தை பெறும் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம் என்று கூறியிருப்பதால் இனி வரும் நாட்களில் முல்லை-கதிர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கூடிய விரைவில் குழந்தையை பெற்றெடுக்க போகின்றனர்.

இருப்பினும் அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் சீரியலின் இயக்குனர் நடத்தாமல் சின்னத்திரை ரசிகர்களை பரபரப்புடன் எப்போதும் வைத்திருப்பது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஸ்பெஷல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்