தளபதி-67 பூஜையில் விஜய்யுடன் போஸ் கொடுத்த அந்த குழந்தை யார் தெரியுமா.? பிரபல காமெடியன் மகளாம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜை உடன் துவங்கப்பட்டது. இதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இதில் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றனர். இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் ஒருவரும் அந்த பூஜையில் கலந்து கொண்டார். தற்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் அவருடைய பேச்சு தான்.

Also Read: தளபதி 67 பட பூஜைக்கு வந்த முக்கிய 2 இயக்குனர்கள்.. அடுத்த பட கூட்டணிக்கு போட்ட அடித்தளம்

இவர் பிரபல நகைச்சுவை நடிகரின் மகள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. காதலில் சொதப்புவது எப்படி, டிக் டிக் டிக், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த அர்ஜுனன் என்பவரின் மகள்தான் இயல். இவர் விஜய்யின் தளபதி 67 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமிட் ஆகியுள்ளார்.

இந்த சந்தோசமான தகவலை நடிகர் அர்ஜுனன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு பெருமிதம் கொண்டார். நடிகர் அர்ஜுனனுக்கு இளன், இயல் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அர்ஜுனனின் மகன் இளன் நயன்தாராவின் O2, கவின் நடிப்பில் வெளியான டாட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Also Read: ஆடியோ உரிமம் மட்டும் இத்தனை கோடி பிசினஸா.? தளபதி 67 இப்பவே கண்ண கட்டுதே

அதேபோல் இயல் அருண் விஜய் உடன் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தை தொடர்ந்து, தற்போது தளபதி 67 படத்திலும் நடிக்க உள்ளார். இவர் தளபதி 67 படத்தின் பூஜையில் சிகப்பு நிற உடையில் செம க்யூட் ஆக கையில் பொக்கே உடன் போஸ் கொடுத்திருந்தார். பேபி இயலுக்கு தளபதி 67 படத்தில் நிச்சயம் விஜய் உடன் செம க்யூட்டான காட்சிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அர்ஜுனன் தன்னால் முடியாததை சினிமாவில் தன்னுடைய குழந்தைகளை வைத்து சாதிக்க வேண்டும் என கனவு கண்டது இப்போது மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. ஆகையால் இவருக்கு சோசியல் மீடியாவில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

காமெடி நடிகர் அர்ஜுனன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம்

arjun-cinemapettai
arjun-cinemapettai

Also Read: பிரம்மாண்டமாக நடந்த தளபதி 67 பூஜை.. சில நிமிடங்களிலேயே லட்சத்தைக் கடந்த வைரல் வீடியோ

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்