Videos | வீடியோக்கள்
பிரம்மாண்டமாக நடந்த தளபதி 67 பூஜை.. சில நிமிடங்களிலேயே லட்சத்தைக் கடந்த வைரல் வீடியோ
விஜய், லோகேஷ் இணைந்திருக்கும் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது.
விஜய், லோகேஷ் கூட்டணியில் தளபதி 67 படம் உருவாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் நேற்றிலிருந்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
லோகேஷ் எப்போதுமே தன்னுடைய படங்களின் அறிவிப்பை ஒரு ப்ரோமோ வீடியோ போல் வெளியிடுவார். மேலும் விஜய் வாரிசு படம் நடித்து முடித்த கையோடு தளபதி 67 படத்துக்கான பூஜை போடப்பட்டது. ஆனால் அப்போது இந்த வீடியோவை வெளியிட்டால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையும் என்று தில் ராஜு லோகேஷிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனால் தான் வாரிசு படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதங்களை நெருங்கும் நேரத்தில் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி பிப்ரவரி முதல் தேதியான இன்று தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதில் ஆரம்பத்திலேயே பெரிய கேமரா காண்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தளபதி விஜய், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். குழந்தை நட்சத்திரம் ஒருவரும் இந்த படத்தில் இடம்பெறுகிறார். இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
Also Read : 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்த ஜோடி.. தளபதி 67 அப்டேட்டால் குதூகலமான சோசியல் மீடியா
மேலும் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் திரிஷா காம்போ தளபதி 67 படத்தில் இணைகிறது. பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியாக உள்ளது. இதற்காக விஜய் மற்றும் லோகேஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Also Read : பணம் சம்பாதிக்க குறுக்கு புத்தியில் யோசிக்கும் விஜய்.. தளபதி 67 மொத்த லாபத்தின் ஷேர் இதுதான்
