என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய எம்ஜிஆர்.. கை கொடுத்து காப்பாற்றிய பாக்யராஜ்

இயக்குனர் பாக்யராஜ் திரைக்கதை அமைப்பதில் கோலிவுட்டில் முதன்மையானவர். இவருடைய திரைக்கதை அமைப்பில் வந்த எல்லா படங்களும் விறுவிறுப்புக்கு குறைவின்றி இருக்கும். இவருடைய எல்லா படங்களுமே ஹிட் தான். இயக்குனர், நடிகர் என்பதையும் தாண்டி மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். இதற்கு ஒரு காரணமும் உண்டு.

1936 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய எம்ஜிஆர் தன்னுடைய வாழ்நாளில் இதுவரை 138 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னாள் முதலைமைச்சர் அண்ணாவின் மீது கொண்ட தீராத பற்றினால் ஆரம்ப கால படங்களில் அவருடைய கொள்கைகளை பற்றி பேசி வந்த அவர், பின்னாட்களில் கட்சி கூட்டங்கள், பிரச்சாரங்களில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார்.

Also Read: கடைசிவரை பெயர் தெரியாமல் நடிப்பினாலேயே மனதில் நின்ற நடிகர்.. விடாமல் வாய்ப்பு கொடுத்த பாக்யராஜ்

அண்ணாவின் மறைவிற்கு பிறகு எம்ஜிஆர் 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். சினிமாவில் கிடைத்த புகழ் மற்றும் வசீகரமான முகம் இவருக்கு முதல் தேர்தலிலேயே வெற்றியை பெற்று தந்தது. 1977ல் நடைபெற்ற பொது தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

அதன் பின்னர் மக்கள் திலகம் எம்ஜிஆர் முழுநேர அரசியலில் ஈடுபட்டதால் அவர் நடித்து கொண்டிருந்த, நடிக்க ஒப்புக் கொண்ட நிறைய படங்களில் இருந்து உடனடியாக விலகினார். இதனால் பல பட நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்தனர். சில படங்கள் பாதி காட்சியாக்கப்பட்டு அப்படியே நின்றன. இதில் 1977ல் 4000 அடி காட்சிகள் படமாக்கப்பட்டு கைவிடப்பட்ட எம்ஜிஆரின் ஒரு படத்திற்கு இயக்குனர் பாக்யராஜ் 1990 ஆம் ஆண்டு உயிர் கொடுத்தார்.

Also Read: தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்

1977ல் எம்ஜிஆர், எம் என் நம்பியார், சங்கீதா ஆகியோரின் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘அண்ணா என் தெய்வம்’ என்ற படம் படமாக்கப்பட்டது. அந்த ஆண்டு எம்ஜிஆர் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சர் ஆனதால் அந்த படத்தை அப்படியே நிறுத்திவிட்டார். இந்த படத்தின் காட்சிகளை அப்படியே வைத்து, அதற்கு ஏற்றவாறு கதைக்களம் அமைத்து ‘அவசர போலீஸ்’ என்னும் படத்தை இயக்கி, நடித்தார் பாக்யராஜ்.

இந்த படத்தில் பாக்யராஜ், கௌதமி, சில்க் ஸ்மிதா, விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரமாக காட்டப்பட்டார். பாக்யராஜ் எம்ஜிஆரின் தங்கை மகனாக நடித்தார். பழைய காட்சிகளை அப்படியே வைத்து இந்த படத்தை எடுத்ததால் பாக்யராஜுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது.

Also Read: பார்த்திபன், பாண்டியராஜன் என வளர்த்து விட்ட பாக்யராஜ்.. ஒருவருக்கு மட்டும் நடந்த துரதிர்ஷ்டம்

 

Next Story

- Advertisement -