ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரு படம் பண்ணிட்டா நீ பெரிய ஆளா.. வெளுத்து வாங்கும் சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கி பேய் படங்களை ரசிகர்களுக்கு வித்தியாசமாக கொடுத்த இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது காப் பி வித் காதல் என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகிபாபு, அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இவர் தலைநகரம் 2, பட்டாம்பூச்சி, வல்லான் போன்ற படங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் சி சமீபத்திய பேட்டியில் சினிமாவில் பற்றிய சிலர் புரிந்து கொள்ளாமல் பேசுவதாக கூறியுள்ளார்.

அதாவது ஒரே ஒரு படத்தை எடுத்துவிட்டு சிலர் சினிமா என்றால் என்ன என்று தெரியாமல் பேசுகின்றனர். எனக்கு இப்போதெல்லாம் சிலரை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒரே ஒரு படத்தை எடுத்து விட்டு சினிமான்னா என்னன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

டேய் அந்த காலகட்டத்தில் கே பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற மூத்த இயக்குநர்கள் எல்லாம் விதவிதமான படங்களை கொடுத்து ஹிட் அடித்துள்ளனர். அவ்வளவு பெரிய ஹிட் படங்களை கொடுத்த அவர்களே பேசாம அமைதியாக இருக்கிறார்கள்.

அவர்கள் செய்ததில் துளிகூட செய்யல. ஏன்டா நீங்க எல்லாம் ஆடுறீங்க என்று அவர்களைப் பார்த்து கேட்கத் தோணுது என இளம் இயக்குனர்களின் ஆட்டத்தை பார்க்க முடியாமல், பல நாள் இருந்த கோபத்தை ஒட்டுமொத்தமாக வைத்து ஒரே சமயத்தில் இயக்குனர் சுந்தர் சி வெளுத்து வாங்கி உள்ளார்.

- Advertisement -

Trending News