கங்குவாவிற்கு விளக்கம் கொடுத்த சிறுத்தை சிவா.. நெஞ்சை பதற வைக்கும் கற்பனை கதை இதுதான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படமான கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதற்கெல்லாம் பேட்டி ஒன்றில் பதில் அளித்த சிறுத்தை சிவா, நெஞ்சை பதற வைக்கும் கங்குவா படத்தின் கற்பனைக் கதையை பற்றி முழு விளக்கம் அளித்துள்ளார் .

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் கங்குவா படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கங்குவா என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.

Also Read: எப்டுறா! கங்குவா டைட்டில் 1983-ல் வச்சிட்டாங்களா? அர்த்தத்தை பார்த்தா பெரிய சம்பவமா இருக்கும் போல

இதற்கு என்ன அர்த்தம் என பலரும் குழம்பித் தவிக்கின்றனர். இதை அடுத்து படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா கங்குவா என்பதன் அர்த்தத்தை விளக்கியுள்ளார். கங்குவா என்பது படத்தின் ஹீரோவின் பெயர். அதுமட்டுமல்ல கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்பதற்கு ‘பவர் ஆஃப் ஃபயர்’ என்று அர்த்தம்.

மேலும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிகளுக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்வு செய்து வைப்பதற்காகவே கங்குவா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார். மேலும் இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை களத்தை கொண்ட படம் ஆகும்.

Also Read: மணிரத்னம் இயக்கத்தில் சறுக்கிய 5 படங்கள்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி மண்ணை கவ்விய கூட்டணி!

இந்த படம் வெறும் கற்பனை கதை இல்லை. வலிமையான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த படம் தன்னுடைய கனவு திரைப்படம், இதன் மூலம் புதிய ஒரு உலகையே உங்களுக்கு காட்டப் போகிறேன். அதுவும் அதிக அளவில் கிராபிக் காட்சிகள் இடம் பெற உள்ளதால் 3டி டெக்னாலஜியில் கண்டுக்களிக்கும்படி படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் உள்ள குதிரை, நாய் மற்றும் கழுகு ஆகியவற்றிற்கும் கதையில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். பெரும் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Also Read: ரிலீசுக்கு முன்பே பல கோடி வியாபாரம் பார்த்த சூர்யா-42.. ஆடியோ உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்