மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்

இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 திரைப்படத்தை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படம் மற்றும் தெலுங்கில் ராம்சரண் தேஜாவை வைத்து ஆர் சி 15 என்னும் படத்தையும் இயக்கி வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் இயக்கி வருவதால் சங்கர் படுபிஸியாக இருக்கிறார்.

இந்த இரண்டு வேலைகளில் பிசியாக இருக்கும் போதே சங்கர் தன்னுடைய அடுத்த படத்திற்கான பிளானையும் போட்டு விட்டார். இப்போதெல்லாம் வரலாற்றுப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆகிறது. சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கூட மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

Also Read: புது புது பிரச்சினைகளில் சிக்கும் ஷங்கர்.. நிம்மதியை தொலைத்து பரிதவிக்கும் பரிதாபம்

ரசிகர்களின் பல்ஸை புரிந்து கொண்ட இயக்குனர் சங்கர், இப்போது வரலாற்று படம் எடுக்க பிளான் பண்ணி விட்டார். கமர்ஷியல் படங்களுக்கு பேர் போன சங்கர், 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான வேள்பாரி என்னும் புனைக்கதையை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டார். சங்கர் எடுக்கப்போகும் முதல் வரலாற்று படம் இதுவாகும்.

இயக்குனர் சங்கர் இந்த படத்திற்கு 1000 கோடி பட்ஜெட் போட்டுள்ளார். அதாவது இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகம். அதே போல் பொன்னியின் செல்வனுக்கு நிகராக வாசகர்களால் விரும்பப்பட்ட கதையை தான் இவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார். வேள்பாரின் கதையின் காப்புரிமையையும் அதிகாரபூர்வமாக வாங்கி விட்டார்.

Also Read: குடும்ப சண்டையால் சங்கர் எடுக்கும் அதிரடி முடிவு.. இன்னும் 5 வருசத்துக்கு உங்க பக்கமே வரமாட்டேன்

1000 கோடி செலவில் உருவாகப்போகும் இந்த படத்தை சங்கர் மூன்று பாகங்களாக எடுக்க முடிவு செய்திருக்கிறார். 1000 கோடி செலவில் எடுப்பதால் வசூலை இரண்டு மடங்காக அள்ள இப்படி ஒரு பிளானை போட்டிருக்கிறார். இந்த படத்தில் கே ஜி எஃப் ஹீரோ யாஷ் அல்லது நடிகர் சூர்யா நடிப்பார்கள். சூர்யா நடித்தால் கண்டிப்பாக இந்த படம் மக்களிடையே ரீச் ஆகிவிடும்.

வேள்பாரி என்னும் குறுநில மன்னனை மையமாக கொண்ட கதை இது. குறிஞ்சி நிலத்தை ஆண்டு வந்த குறுநில மன்னனான பாரியின் திறமை கண்டு பொறாமையுற்ற சேரன், சோழ,பாண்டியன் அரசர்கள் ஒன்றிணைந்து அவனை துரோகத்தால் வீழ்த்துவது தான் வேள்பாரியின் கதை. இந்த கதை ஆனந்த விகடனில் பிரசுரமான கதை.

Also Read: பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நடித்த 5 படங்கள்.. தியேட்டரில் செம்ம ரெஸ்பான்ஸ்!

Next Story

- Advertisement -