ஷங்கருக்கு பிடித்த வில்லன் நடிகர்.. யாரும் எதிர்பாராத கூட்டணி

பிரம்மாண்ட படைப்புகள் மூலம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அதே அளவு வசூலிலும் சாதனை படைக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கிய சிவாஜி, எந்திரன், 2.0 என எல்லா படமுமே வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் தற்போது ராம்சரணை வைத்து ஷங்கர் ஒரு படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். மேலும் கமலஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்படம் மீண்டும் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புள்ளது.

ஷங்கர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்க ஆசைப்படுவதாக ஷங்கர் கூறியுள்ளார். அதாவது மாஸ் நடிகராக உள்ள ஒரு நடிகர் எந்த தயக்கமும் இல்லாமல் வில்லனாக நடிப்பது மிகப் பெரிய விஷயம்.

அதிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த அனைத்து படமுமே பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் என இரண்டு படங்களிலும் தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் வில்லனாக மிரட்டியிருந்தார். ஒவ்வொரு படத்திலும் அவருடைய நடிப்பு மெருகேற்றிக் கொண்டே போய்க்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் படங்களில் மட்டுமன்றி அனைத்து மொழி படங்களிலும் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் நான்கைந்து படங்களில் கமிட்டாகி உள்ளாராம். மிகக் குறுகிய காலத்திலேயே மாபெரும் உயரத்தை விஜய் சேதுபதி அடைந்துள்ளார். இயக்குனர் ஷங்கர் என்னுடைய படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றால் முதல் சாய்ஸ் விஜய் சேதுபதிதான் என கூறியுள்ளார்.

மேலும் ஷங்கர் தன்னுடைய அடுத்த படத்தில் கண்டிப்பாக விஜய்சேதுபதி நடிப்பார் என கூறியிருந்தார். இதனால் ஷங்கர் இயக்கத்தில் தொடங்க உள்ள இந்தியன் 2 படத்தில் கூட விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் உலக நாயகனுடன் விஜய் சேதுபதி மோதயுள்ளாரா என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Next Story

- Advertisement -