சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சைக்கோ இயக்குனர்.. கௌதம் மேனனுக்கு டஃப் கொடுப்பார் போல

இப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் நடிகர்கள் ஆவதும், காமெடியன்கள் ஹீரோக்கள் ஆவதும், ஹீரோக்கள் பாடலாசிரியர்கள் ஆவதும் புதிய ட்ரெண்டாக மாறிவிட்டது. இந்த ரூட்டில் இயக்குனர்கள் ஹீரோக்களாகவும், வில்லன்களாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். SJ சூர்யா இயக்குனராக தன வாழ்க்கையை ஆரம்பித்து இப்போது ஒரு தேர்ந்த நடிகராக மாறிவிட்டார்.

படத்தில் ஹீரோக்களை விட அவர்களுடன் மோதும் வில்லன்களை பார்வையாளர்கள் இப்போது ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். வில்லன்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமானதால் இயக்குனர்களும் அவர்களின் படத்தில் வில்லன்களை தேடி தேடி தேர்வு செய்கின்றனர். விஜய் சேதுபதி இந்த ரூட்டில் இப்போது டாப்பில் இருக்கிறார். காதல் கதைகளை காவியமாக படைக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது வில்லனாக மிரட்டி வருகிறார்.

Also Read : சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

இப்போது அவரை தொடர்ந்து மற்றுமொரு இயக்குனர் இந்த ரூட்டில் இணைந்து இருக்கிறார். தன்னுடைய வித்தியாசமான கதைகளால் ரசிகர்களை மிரட்டி வரும் மிஷ்கின் தான் இப்போது வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார். தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமாகியவர் இயக்குனர் மிஷ்கின். அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ படங்களின் மூலம் கோலிவுட்டில் நிறைந்த இடத்தை பிடித்துவிட்டார்.

இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான நந்தலாலா திரைப்படத்தின் மூலம் நடிப்பில் இறங்கினார். இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார்.

Also Read : சிவகார்த்திகேயனுக்கு விழுந்த பெரிய அடி.. மூன்றாவது நாள் வசூலில் தடுமாறிய பிரின்ஸ்

இப்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். டாக்டர், டான் வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவா நடித்த பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து இவர் அதிதி ஷங்கருடன் மாவீரன் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது இந்த மாவீரன் படத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக மிஷ்கின் அறிவித்து இருக்கிறார். இந்த படத்தில் இவர் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாகவும், சிவகார்த்திகேயனுக்கு மெயின் வில்லன் கேரக்டர் எனவும் கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன்-மிஷ்கின் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் படமாக்கப்படும்.

Also Read : காலை வாரிவிட்ட பிரின்ஸ் படம்.. உச்சகட்ட பயத்தில் இருக்கும் விஜய், தனுஷ்

Next Story

- Advertisement -