தஞ்சாவூர் கோவிலை குறிவைக்கும் மணிரத்தினம்.. 2 பெரிய கம்பெனிகளுக்கு விரிக்கும் வலை

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது தயாராகியுள்ள நிலையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இப்பொழுது மணிரத்னம் அந்த படத்தின் டீசர் வெளியிடுவதற்கு நாள் பார்த்து வருகிறார். மணிரத்னம் இயக்கி தயாரிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் டீசரை வரும் ஜூலை 7 ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் வெளியீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்காக இரண்டு பெரிய இடங்களை குறி வைத்து வருகிறார். இப்பொழுது அந்தப் படத்தில் என்னவெல்லாம் மெருகேற்ற முடியுமோ அந்த வேலைகளை செய்து வருகிறார் மணிரத்னம். இந்த டீசர் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்துவதா அல்லது தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் நடத்துவதா என்று திட்டமிட்டு வருகிறார்.

தஞ்சாவூரில் உள்ள கோவிலில் நாமத்தினால் இந்தப் படத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றும் யோசித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் பொன்னின் செல்வன் திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் கேரக்டர்கள் அறிமுகம் ரசிகர்களிடையே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில், தற்போது படத்தின் டீசரை வேற லெவல் பிரம்மாண்டமாக வெளியிட மணிரத்னம் திட்டம் தீட்டி இருக்கிறார்

இதற்காக 2 இவன்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கம்பெனியை நாடியுள்ளார். மும்பையில் மற்றும் சென்னையில் உள்ள பெரிய கம்பெனிகளிடம் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு பேசிவருகிறார். இந்த கம்பெனிகள் நடத்தும் இவன்ட் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்குமாம். அதனால் மணிரத்னம் அவர்களுக்கு பெரிய வலையை விரித்து வருகிறார்.

Next Story

- Advertisement -