தப்பு செஞ்சிட்டு அதுக்கு வட்டியும் கேட்ட கோவக்கார இயக்குனர்.. துரோகத்தால் AK சொன்ன வாக்கு, அப்படியே பலிச்சிருச்சி

நடிகர் அஜித்குமார் கோலிவுட் சினிமாவை பொறுத்த வரைக்கும் அவருடைய ரசிகர்களால் மட்டுமல்லாமல் சினிமாவை சேர்ந்தவர்களாலேயே கொண்டாடப்படுபவர். அதற்கு காரணம் அவருடைய பணிவும், தன்னடக்கமும், உதவும் குணமும் தான். அப்படிப்பட்ட அஜித்குமாரிடமே தன்னுடைய ஆணவத்தை காட்டி இப்போது வருந்தி கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர்.

பொதுவாக ஒரு திரைப்படம் தயாராகும் போது திடீரென அந்த படத்தில் கதை மாறும், ஹீரோ மாறுவார்கள், இயக்குனர்கள் கூட மாறுவார்கள், மற்ற கதாபாத்திரங்கள் கூட மாற்றப்படுவார்கள். இது அந்தந்த சூழ்நிலையை பொறுத்த காரணங்களே. ஆனால் அஜித் விஷயத்தில் இதே போன்ற சம்பவம் ரொம்பவும் வித்தியாசமாக நடந்திருக்கிறது.

Also Read: தளபதி கைவிட்டதால் அஜித்தை தட்டி தூக்கிய மகிழ் திருமேனி.. அதிர்ஷ்டம் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகுது

நடிகர் அஜித் நடிக்க இருந்து மிஸ் ஆன படங்களில் ஒன்று நான் கடவுள். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கியிருந்தார். இயக்குனர் பாலா முதலில் இந்த படத்திற்காக அணுகியது நடிகர் அஜித்தை தான். நடிகர் அஜித்தும் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். படத்திற்கான அட்வான்ஸ் கூட அஜித்துக்கு கொடுக்கப்பட்டது.

நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக அஜித் முழுக்க முழுக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். அந்த சமயங்களில் அஜித் நீண்ட தாடியுடன் தான் காணப்பட்டார். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று இந்த படத்துக்குள் நுழைந்தவர் தான் நடிகர் ஆர்யா. ஆர்யாவை இந்த படத்தின் நடிக்க வைக்க பாலாவும் முடிவு செய்துவிட்டார்.

Also Read: மகிழ் திருமேனி இயக்கிய 5 சிறந்த படங்கள்.. அஜித்தை இம்ப்ரஸ் செய்த அந்த 2 படங்கள்

நடிகர் அஜித்குமாரிடம் இயக்குனர் பாலா, தான் ஹீரோவை மாற்றி விட்டதாகவும், அதனால் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் .ஆனால் அஜித் நான் படத்தில் நடிக்க ரெடியாக இருந்தபோது ஹீரோவை மாற்றியது நீங்கள் தான், எனவே அட்வான்ஸ் மட்டும் தான் திருப்பி தர முடியும் என்று சொல்லி இருக்கிறார். மேலும் இந்த பணத்திற்கான பஞ்சாயத்து சென்னையில் பிரபல ஹோட்டலில் நடைபெற்றிருக்கிறது.

அப்போது இயக்குனர் பாலா நான்கைந்து அடியாட்களை வைத்து அஜித்தை மிரட்டி இருக்கிறார். இதனால் கோபமடைந்த நடிகர் அஜித் அன்று இரவோடு இரவாக பணத்தை புரட்டி பாலாவிடம் கொடுத்திருக்கிறார். இப்படி செய்யாத தப்புக்கு அஜித்தை பகைத்துக் கொண்டதால் தான் என்னவோ இன்று அவருடைய ஃபேவரைட் ஹீரோக்களாலேயே ஒதுக்கப்பட்டிருக்கிறார் பாலா. அதுமட்டுமில்லாமல் பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார்.

Also Read: அஜித்தை சொக்குப்பொடி போட்டு வைத்திருக்கும் விஷ்ணுவர்தன்.. மகிழ்திருமேனிக்கு கொடுத்த வாய்ப்பிற்கு இதான் காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்