மகிழ் திருமேனி இயக்கிய 5 சிறந்த படங்கள்.. அஜித்தை இம்ப்ரஸ் செய்த அந்த 2 படங்கள்

தற்சமயம் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் இயக்குனர் மகிழ் திருமேனியின் பேச்சு தான். ஏனென்றால் விக்னேஷ் சிவன், அஜித் காம்பினேஷன் நின்னு போனது. அடுத்த அஜித் மகிழ் திருமேனி படத்தில் நடித்திருக்கிறார். அதிலும் மகிழ் திருமேனி ஏற்கனவே இயக்கிய 2 படங்களின் மூலம் இம்ப்ரஸ் ஆகி தான், ஏகே 62 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார்.

முன்தினம் பார்த்தேன்: 2019 காதல் நகைச்சுவை திரைப்படம் ஆக வெளியான முன்தினம் பார்த்தேனே என்ற படத்தின் மூலம் இயக்குனராக மகிழ் திருமேனி அறிமுகமானார். இந்தப் படத்திற்கும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்காவிட்டாலும் படத்தின் திரைக்கதை நகர்வு, நகைச்சுவை போன்றவற்றிற்காக பாராட்டப்பட்டது.

Also Read: அஜித்தை சொக்குப்பொடி போட்டு வைத்திருக்கும் விஷ்ணுவர்தன்.. மகிழ்திருமேனிக்கு கொடுத்த வாய்ப்பிற்கு இதான் காரணம்

தடையறத் தாக்க: 2012 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். சுவாரசியமான கதைக்களத்தை கொண்ட இந்த வசூல் ரீதியாக வெற்றி பெற விட்டாலும் ரசிகர்களிடமிருந்து நல்ல விமர்சனத்தை பெற்ற படம்.

தடம்: 2019 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான தரமான படம் தான் தடம். அருண் விஜய்க்கு தடையறத் தாக்க படத்தின் மூலம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் மகிழ் திருமேனி மீண்டும் தடம் படம் மூலம் மற்றொரு டர்னிங் பாயிண்ட்டை கொடுத்திருந்தார். இந்த படம் அஜித்தை மிகவும் கவர்ந்தது. அதனால் தான் ஏகே 62 படத்தின் தயாரிப்பாளராக மகிழ் திருமேனியை தேர்வு செய்திருக்கிறார்.

Also Read: மகிழ் திருமேனியுடன் கைகோர்த்த இயக்குனர்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த ஏகே 62

மீகாமன்: மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மீகாமன். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். மீகாமன் படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக இப்படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் நல்ல கதை களத்தை கொண்ட இந்தப் படம் அஜித்தை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் அஜித் ஏகே 62 படத்தில் மகிழ் திருமேனியை தேர்வு செய்திருக்கிறார்.

கலகத் தலைவன்: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு பிறகு வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கினார். இதில் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காற்று மாசுபடுதலை மையமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் கலகத் தலைவன் படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

Also Read: 26 நாட்களை தாண்டியும் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு, துணிவு.. பின்னுக்கு தள்ளப்பட்ட மூன்று வார புதிய படங்கள்

இவ்வாறு இந்த 5 படங்கள் தான் இதுவரை மகிழ் திருமேனி இயக்கிய சிறந்த படங்களாகும். அதிலும் தடையறத் தாக்க, மீகாமன் போன்ற இரண்டு படங்களும் அஜித்தை வெகுவாகக் கவர்ந்ததால் ஏகே 62 படத்தின் வாய்ப்பை அவருக்கு தூக்கி கொடுத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்