அட்லீயின் படம் வெற்றி பெறுவதற்கு இதுதான் காரணம்.. அதான் எல்லா படத்துலயும் இந்த சீன் இருக்கோ

தமிழ் சினிமாவில் சில காலங்களுக்கு முன்பு இயக்குனராக அறிமுகமாகி தற்போது தவிர்க்கமுடியாத இயக்குனராக இருப்பவர் அட்லி. இவரது உருவத்திற்கும், கலருக்கும் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. ஆனால் இவரது திறமை அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்து தான் வருகிறது.

அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது. அடுத்ததாக அட்லி யாருடன் இணைவார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் இவருடைய படம் வெற்றி பெறுவதற்கு இது தான் காரணம் என சமூக வலைதளங்களில் சிலர் கூறி வருகின்றனர்.

அட்லி இயக்கிய படங்கள் அனைத்திலுமே ரசிகர்கள் எதிர்பார்க்காத சமயத்தில் சென்டிமென்ட் காட்சியை வைத்து அசத்தி இருப்பார். அட்லியின் முதல் படமான ராஜா ராணி படத்தில் கூட நஸ்ரியா ஐஸ்கிரீம் வாங்கி சந்தோசமாக ஆர்யா பார்ப்பதுபோல் காட்டிவிட்டு திடீரென நஸ்ரியா ஆக்சிடெண்டில் இறப்பது போல் ஒரு எமோஷனல் காட்சியை வைத்திருப்பார்.

atlee
atlee

அடுத்ததாக தெறி படத்தில் விஜய் மற்றும் சமந்தா சந்தோஷமாக பேசி கொண்டிருக்கும் நேரத்தில் வில்லனால் சமந்தா இறப்பது போல் காட்சி அமைத்திருப்பார். மெர்சல் படத்திலும் மருத்துவமனையில் ஒரு எமோஷனல் காட்சி வைத்திருப்பார். பிகில் படத்தில் விஜய்க்கும் அப்பாவிற்கும் சென்டிமென்ட் காட்சி இருக்கும்.

அட்லி இயக்கிய 4 படங்களிலுமே எமோஷனல் காட்சியை வைத்திருப்பார். சினிமா வருவதற்கு முன்பு அட்லி இயக்கிய முகப்புத்தகம் குறும்படத்தில் ஹீரோயினுக்கு கண்ணு தெரியாதது போல் எமோஷனல் காட்சி அமைத்திருப்பார்.

ஷங்கர் படம் என்றால் பிரம்மாண்டம் கண்டிப்பாக இருக்குமோ, அதேபோல் அட்லீ படம் என்றால் எமோஷனல் காட்சி கண்டிப்பாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -