படத்தில் தான் பிரம்மாண்டம் போல.. சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் ஷங்கர்

director-shankar
director-shankar

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் தான் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. தற்போது ஷங்கர் தான் அனைத்து இயக்குனருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

சமீபகாலமாக ஊரடங்கு காரணமாக சினிமா துறையில் பெரிய அளவில் யாருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் தற்போதுவரை தயாரிப்பு தரப்பிலிருந்து யாருக்கும் சம்பளம் கொடுக்காததால் படத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் திரைக்கதை எழுத்தாளரான கருத்தேள் ராஜேஷ் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் சூது கவ்வும் மற்றும் நேற்று இன்று நாளை ஆகிய படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இப்படங்கள் வெற்றி பெற்றதால் முன்னணி இயக்குனர்களின் படத்தில் பணியாற்ற வைத்தனர்.

அப்படித்தான் ஷங்கர் தயாரிப்பில் உருவான 24 ஆம் புலிகேசி படத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்திலும் பணியாற்றியுள்ளார். ஆனால் கருத்தேள் ராஜேஷ் ஏராளமான இயக்குனர்களுக்கு எழுத்தராக பணியாற்றி உள்ளார்.

இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் படங்கள் வெளியாகி விட்டாலோ ரசிகர்களிடம் பெயர் பெற்று விட்டாலோ உடனே நல்லவர்கள் போல் வீடு கட்டிக் கொடுத்து விடுவேன் என கூறுவார்கள். ஆனால் வீடு கட்டி தர மாட்டார்கள் அது போல தான் படம் வெளியாவது முன்பு தங்களுக்கான வரவேற்பு இருக்கும். படம் வெளிவந்த பிறகு சம்பளமும் வராது வரவேற்பும் கிடைக்காது என மறைமுகமாக கூறியுள்ளார்.

ஆனால் ஷங்கர் பெரிய இயக்குனர் என்பதால் இவரை மட்டும்தான் பலரும் சம்பளம் தரவில்லை எனக் கூறி வருகின்றனர். ஆனால் ஏராளமான இயக்குனர்கள் தங்களுக்கு உதவி இயக்குனராக இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது மற்றும் படத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் தருவதில்லை.

Advertisement Amazon Prime Banner